ஆசை ஆசையா இருந்தோமே? வந்தே பாரத் அரக்கோணம்கூட ஓடுச்சே? அப்ப முதல் வந்தே மெட்ரோ" சென்னைக்கு இல்லையா?
சென்னை: ஐசிஎப்பில் தயாரான வந்தே பாரத் ரயிலானது, சென்னை - ராணிப்பேட்டை வாலாஜா ரோடு இடையே, வந்தே பாரத் சோதனை சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்த நிலையில், எதிர்பாராத ஒரு ஏமாற்றம் சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.. அது என்ன?
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) திகழ்ந்து வருகிறது.. இந்த தொழிற்சாலையில், கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாராகியிருக்கிகின்றன. இதில் பாரத் ரயில் ரயில்களின் தயாரிப்புகளும் அடங்கும்.

ஐசிஎப்-ல் இதுவரை 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.. இந்த நிதியாண்டில் மட்டும் 3515 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் இடம்பெற உள்ளது.
சாதாரண பெட்டிகள்: சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன.
அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு, வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவைகளும் இங்குதான் தயாரிக்கப்பட போகிகின்றன.
மெட்ரோ ரயில்கள்: கடந்த ஜூலை மாதம்கூட, சென்னை ஐ சி எப் தொழிற்சாலைக்கு 50 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 50 வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இதைத்தவிர, 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட, முதல் ரயில் எப்படியும் சென்னைக்கு இயக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த ரயில் கடந்த ஜூலையிலேயே தயாராகிவிட்டது. 150 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 12 பெட்டிகள் உள்ள இந்த ரயிலில், AC வசதி, உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள், சிசிடிவி கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் இப்படி எல்லா வசதிகளுமே உண்டு.
எதிர்பார்ப்பு: இந்த ரயிலை, கடந்த 3ம் தேதி சென்னை -- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே, மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.. அதனால், சென்னை - காட்பாடி அல்லது திருப்பதி, சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகமாகவே ஏற்படுத்திவிட்டது.
ஆனால், இந்த ரயிலை மும்பைக்கு அனுப்பப் போகிறார்களாம்.. இது ஒட்டுமொத்த தமிழக பயணிகள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், நம்ம சென்னை ஐசிஎப்-ல் தயாரானது, வடமாநிலத்தில் ஓடப்போவது தமிழகத்துக்கே "கெத்து"தான்..!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications