சென்னையே அதிருது.. நிலைமை மோசமா போகுதே.. தீபாவளி வேற கிட்ட வருது.. இப்ப "மூச்சுமுட்டுதே".. என்னாச்சு
சென்னை: மனிதன் சுவாசிக்க உகந்த காற்றின் தரக்குறியீடு 50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட 3 மடங்கு காற்று மாசு அடைந்துள்ளது, சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மாசு பாதிப்பு என்பது, இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து கொண்டிருக்கிறது.. நம் இந்தியாவை பொறுத்தவரை எந்த நகரமும் உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எட்டவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாகவே இருக்கிறது.. தொடர்ந்து இப்போதும், உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக நம் டெல்லி திகழ்கிறது..
இயந்திரமயமாக்கல்: அதுபோலவே சென்னையிலும், காற்றின் தரம் மாசடைந்துவருகிறது. அதனால்தான், மின்சார போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவது, சாலை துப்புரவு பணிகளை இயந்திரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களில், சென்னை மாநகராட்சி பல இடங்களில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்கியுள்ளது. அந்த பகுதிகளில் அவை காற்றின் தரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளன. இதனால் வாகனங்கள் அதிகம் இருக்கும் சாலை சந்திப்புகளில் அதிகளவில் நீரூற்றுகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
ஆகாய நடைமேடை: இப்படித்தான் தி.நகரிலும் இந்த பிரச்சனை இருந்தது.. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடவும், ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது, வாகன நெரிசல் கணிசமாக குறைந்துள்ளதுடன், காற்று மாசுபாடும் கணிசமாக குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் சென்னையில், உலக தரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதாலும், மாசு பெருகிவிட்டதாக சொல்கிறார்கள். அந்தவகையில், கடந்த 23ம் தேதியிலிருந்தே, சென்னையில் காற்றின் தரம் மோசம் அடைந்து வருவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தரக்குறியீட்டு அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
குறியீடு: பொதுவாக, காற்று மாசு தொடர்பான கணக்கீடு என்பது, ஒரு இடத்தில், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்க தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை கண்டறியும் அளவீடு ஆகும். இதைவைத்துதான் காற்றின் தரம் அளவீடு செய்யப்படுகிறது.
இந்த அளவீடின்படி, காற்றின் தரக்குறியீடு 50-ஐ தாண்டினாலே, அதில் நுண்ணிய துகள்கள், கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பரவிக் கிடக்குமாம்.. அதை சுவாசிக்கும்போது மனிதர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்கிறது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம். ஆனால், நம்முடைய சென்னையிலோ, அரும்பாக்கம், ஆலந்தூர், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசடைந்து, ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 117 முதல் 195 வரை பதிவாகியிருக்கிறதாம்.
கடந்த 23ம் தேதி காற்றின் தரக்குறியீடு 109 ஆகவும், மறுநாள் 24ம் தேதி 121 ஆகவும், 25ம் தேதி 127 ஆகவும், பதிவாகியிருக்கிறது. நேற்று 26ம் தேதி, ஆலந்தூரில் காற்று தர குறியீடு 192 ஆகவும், ஆலந்தூர் பேருந்து பணிமனை அருகே காற்று தர குறியீடு 104 ஆகவும், கொடுங்கையூரில் காற்று தர குறியீடு 119 ஆகவும், அரும்பாக்கத்தில் 111 ஆகவும், ராயபுரத்தில் 103 ஆகவும், பெருங்குடியில் 152 ஆகவும், வேளச்சேரியில் 71 ஆகவும், பதிவாகியிருக்கிறது.
புயல் காற்று: இப்படி, திடீரென சென்னையில் காற்று மாசு அதிகரிக்க என்ன காரணம்? வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஹாமூன் புயலின் தாக்கத்தினால், சென்னைக்கு வடக்கில் இருந்து காற்று வீசியது.. அதனால்தான் மாசு அதிகமாகிவிட்டது என்று பிரதான காரணமாக சொல்கிறார்கள்.. ஆனால், ஹாமூன் 2 நாளைக்கு முன்பே புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், காற்று மாசுபாடு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.. எனினும், விரைவில் தீபாவளி பண்டிகை போவதால், இந்த கவலை அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை: எப்போதுமே இந்த தீபாவளி பண்டிகையின்போது, காற்று மாசுபாடு என்பது நாடு முழுவதும் அதிகமாகிவிடும். அதனால்தான், டெல்லி உட்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த முறை, தீபாவளிக்கு சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால், பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் குறைத்து கொண்டாலே போதும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அதுமட்டுமல்ல, கடந்த ஜுன் மாதம், கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பு, நாட்டின் முக்கிய நகரங்களின் காற்றின் தரம் மற்றும் மாசு குறித்த ஆய்வை செய்திருந்து, ஸ்பெர் தி ஏர் என்ற தலைப்பில் அறிக்கையாகவும் அதனை வெளியிட்டிருந்தது.

சென்னை மாசு: அதன்படி, உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் காட்டிலும், சென்னையில் காற்றில் மாசுபடுத்தும் துகள்கள் அதிகமாகிவிட்டதாகவும், சென்னையில் பாதுகாப்பான அளவை காட்டிலும் மாசுபடுத்தும் துகள்கள் பல மடங்கு அதிகமாகி விட்டதாகவும் அந்த அறிக்கையில் கவலை தெரிவித்திருந்தது.
இப்படி, காற்று மாசுபாட்டில் சென்னை சிக்கியுள்ள நிலையில், மாசுபட்ட பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது மிகுந்த நம்பிக்கையை தந்துவருகிறது.. அதிலும், மின்சார போக்குவரத்து, உள்கட்டமைப்பை உருவாக்குவது, சாலை துப்புரவு பணிகளை இயந்திரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி கையிலெடுப்பது, கூடுதல் எதிர்பார்ப்பை சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications