3 தங்க நெக்லஸை உற்று பார்த்த முத்துலட்சுமி.. குழம்பிய நகைக்கடைக்காரர்.. சென்னையில் இப்படியொரு பெண்?
சென்னை: யானைகவுனி பகுதியில் உள்ள தங்க நகை கடையில் நடந்த சம்பவம் குறித்தும், இது தொடர்பாக கைதானவர்கள் குறித்தும் போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.. இது தொடர்பாக காவல்துறைசார்பில் செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த முத்துலட்சுமி என்ற 40 வயது பெண்ணுக்கு, நகை திருடுவதே திருட்டாக இருந்து வந்துள்ளது.. ஆனால், பலமுறை நகை திருடியும் யாரிடமும் சிக்காமல் இருந்துள்ளார்..

இப்படி நகை திருடுவதற்காக ரெகுலர் கஸ்டமர் போல, நகைக்கடைக்காரர்களிடம் பழகியும் வந்திருக்கிறார்.. சம்பவத்தன்றும் வழக்கம்போல் நகையை வாங்கும்பெயரில், ஆர்டர் செய்ய சென்றிருக்கிறார்.அப்போது நெக்லஸை திருடினார்.
பிறகு, ஆர்டர் செய்யப்பட்ட நகையை வாங்க மீண்டும் கடைக்கு சென்று, இன்னொரு நெக்லஸை திருடியிருக்கிறார்.. வாங்கி வந்த நகை சரியில்லை, அதனால் வேறு நகையை மாற்றித்தரவேண்டும் என்று கேட்டு, மற்றொரு நெக்லஸை திருடியிருக்கிறார். 3 முறையும் 3 நெக்லஸை திருடியதையடுத்து, இப்போது வசமாக சிக்கியிருக்கிறார்.
சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், "சென்னை, யானைகவுனி, என்எஸ்சி போஸ் ரோட்டில் நரேஷ்குமார் மேத்தா (54) என்பவர் ஶ்ரீமஹாவீர் ஜீவல்லரி என்ற தங்கநகை கடை நடத்தி வருகிறார். இவர் ஜனவரி 17ம் தேதி அன்று இரவு கடை மூடுவதற்கு முன்பு தங்க நகைகளை சரிபார்த்த போது, சுமார் 240 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ்கள் திருடு போயுள்ளது தெரியவந்தது.
இது குறித்து நரேஷ்குமார் மேத்தா யானைகவுனி காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கேமரா: யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் மேற்படி தங்க நெக்லஸ்களை திருடிய தண்டையார்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (40) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மேற்படி தங்க நகைக் கடையின் வாடிக்கையாளர் என்பதும், இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று மேற்படி தங்க நகை கடைக்கு சென்று, தங்க நெக்லஸ்களை பார்த்துவிட்டு தங்க நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு, கடையில் இருந்த தங்க நெக்லஸை திருடிச் சென்றதும், பின்னர் 2025ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று ஆர்டர் கொடுத்த தங்க நெக்லஸை வாங்குவதற்கு தனது குழந்தையுடன் கடைக்கு சென்று, தங்க நெக்லஸை பார்த்து அதில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறி சரி செய்ய சொல்லி செல்லும்போது, மேலும் சில தங்க நெக்லஸ்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
விசாரணை: மேலும், அவரிடமிருந்து சுமார் 83.55 கிராம் எடையுள்ள 3 தங்க நெக்லஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications