Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ. 2700 நிதி உதவி.. எப்படி பெறலாம்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை மூலம் புராதனமான கிராம கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி ரூ.2,700 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 168 சிவாச்சாரியார், 149 பட்டாச்சாரியார், 185 பூசாரிகள் என மொத்தம் 502 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் ரூ. 2700 நிதி உதவி பெற விரும்பும் கிராம கோவில் அர்ச்சகர்கள் விண்ணப்பிக்கலாம்

கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை மூலம் புராதனமான கிராம கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி ரூ.2,700 மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. தற்போது 168 சிவாச்சாரியார், 149 பட்டாச்சாரியார், 185 பூசாரிகள் என மொத்தம் 502 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.

chennai temple priests

அடுத்த ஆண்டு (2025) நடைபெறும் வாய்மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி பெற விண்ணப்பம் செய்பவர்கள், அறக்கட்டளை மூலம் அனுப்பப்படும் புத்தகத்தில் உள்ள ஸ்ரீசுவாமிகள் குறிப்பிட்ட பூஜை முறைகளை நன்கு படித்து, அதன்படிதான் பூஜை செய்ய வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முற்பட்டதலிருந்த இந்த கோவில்களில் முறையின்றி அவரே பூஜை செய்தல் அவசியம். விண்ணப்பதாரர் மாத வருமானம் ரூ.7,500-க்கு மிகாமல் இருக்க வேண்டு்ம். நிதி உதவி பெற, விண்ணப்ப படிவம் பெற விரும்புபவர்கள் தங்களது வேண்டுகோள் கடிதத்தை அக்டோபர் 30-ந் தேதிக்குள், 'கச்சிமூதூர் அர்ச்சகர்கள் சேம நல அறக்கட்டளை, எண்.16, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர்புரம், சென்னை- 600 085' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000-க்கும் கீழ் மட்டுமே ஆகும். இதில் 12,959 திருக்கோயில்களில் 'ஒரு கால பூஜைத்திட்டம்' அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் தமிழக அரசால் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+