கோயம்பேடு ஆம்னி பஸ்ஸில் போன பெங்களூர் ஐடி பெண்.. வேலூரில் டக்னு கிட்ட வந்த உருவம்.. சேகருக்கு தேவையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. நாளுக்கு நாள் ஆம்னி பஸ்களில் இதுபோன்று தொடரும் அட்டூழியங்களால், பெண் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. என்ன நடந்தது?

முன்பெல்லாம், ஆம்னி பஸ்களில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் மட்டும்தான் இருந்தன... எனினும், இரவு நேர பயணத்துக்கு படுக்கை வசதியை பயணிகள் விரும்பினார்கள். இதன்காரணமாக, ஆம்னிகளில் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தினார்கள்.

chennai bangalore koyambedu

அதுமட்டுமல்லாமல், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள், இருக்கைகளில் நீண்ட நேரம் உட்கார முடியாதவர்கள், ஆம்னி பஸ் பயணத்தை தேடிவந்தார்கள். ஆனால், நாளடைவில், நட்சத்திர ஓட்டல்களை போலவே, படுக்கைகள் தனி அறைகள் போலவே சொகுசாக வடிவமைக்கப்பட்டுவிட்டன.. சுற்றிலும் ஸ்கிரீன்கள், மெத்தைகள், தனித்தனி டிவி, தனித்தனி விளக்கு என அத்தனை வசதிகளும் ஆம்னியில் செய்யப்பட்டுள்ளது.

வசதிகள்: இந்த வசதிகள் பலருக்கும் உதவுகிறது என்றாலும், சில விரும்பத்தகாத செயல்களும் ஆம்னியில் நடப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.. அதேபோல, பெண்கள் தனித்து பயணிக்கும்போது, பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகிவிட நேர்கிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், காவல்நிலையத்தில் புகார்களையும் தந்து வருகிறார்கள். அந்தவகையில், இப்போது மீண்டும் ஒரு சம்பவம் ஆம்னி பஸ்ஸில் நடந்துள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்ஸில் ஐடி பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது.. அதுவும், மற்றொரு ஆம்னி பஸ் டிரைவர் இப்படியொரு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.

கோயம்பேடு போலீஸ்: சென்னையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 51 வயதிருக்கும்.. நேற்று அதிகாலையில் கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: "பெங்களூரில் ஐடி கம்பனியில் வேலை செய்து வரும் நான், மாதத்தில் ஒரு நாள் மட்டும் சென்னைக்கு வந்து எனது மகளை பார்த்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு செல்வது வழக்கம்.

அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது வாணியம்பாடி அருகே பேருந்து நின்றபோது நான் பயணித்த பேருந்தில் ஏறியவர் நான் அமர்ந்து இருந்த சீட்டுக்கு பின்னால் அமர்ந்து வந்தார். திடீரென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் கூறியிருந்தார்.

அதிரடி கைது: இந்த புகாரைப் பெற்று கொண்ட போலீசார் விரைந்து வந்து ஆம்னி பேருந்து நிலையத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் சேகர் (38) என தெரியவந்தது. அவர் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. பின்னர், கைது செய்யப்பட்ட சேகர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+