கோயம்பேடு ரோடு ரோலர்.. மனைவியுடன் சென்ற மாற்றுத்திறனாளிக்கு எமனாகியது.. ஒப்பந்ததாரர் மீது ஆக்ஷன்
சென்னை: சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளிக்கு எமனாக மாறியது.இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரோடு ரோலர்களை இயக்குவோர் சற்று கவனக்குறைவாக இருந்தால், ரோடு போடும் போது, சாலையில் வைத்து அப்படியே யாரையாவது நசுக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சில மாதங்கள் முன்பு மதுரையில் நடந்தது. மதுரையில் கடும் வெயிலின் காரணமாக ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த கட்டிட சூப்பர்வைசர் கடந்த ஜூன்மாதம் உயிரிழந்தார். ரோடுரோலருக்கு அடியில் சூப்பர் வைசர் அமர்ந்திருந்த போது, அந்த நேரத்தில் திருமண மண்டபத்தில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்தது. இதனால் கீழே உட்கார்ந்திருந்த இன்ஜினியர் கத்தியது, ரோடு ரோலரை இயக்கியவருக்கு கேட்கவே இல்லை.. அதேபோல் ஒருசம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி இரவு புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரோடு ரோலரை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த ரோடு ரோலர் அங்கு மனைவியுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளியான பாஸ்கர ராஜா மீது வேகமாக மோதியது. இதில், மாற்றுத்திறனாளி பாஸ்கர் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரோடு ரோலர் டிரைவரான வெங்கடேசன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி, 127-வது வார்டு உதவி என்ஜினீயர் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் எந்தவித சாலைப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சி அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications