சூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..!
சென்னை சட்டகல்லூரி மாணவர்கள் ஆக்சிஜன் ஆட்டோ சேவையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை: ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வரும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு, ஆக்ஸின் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..!
இதில், சென்னையில் இந்த நிலைமை மோசமாக உள்ளது.. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட தனியார் ஆம்புலன்கள் கிடைப்பது இல்லை.. பல மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது..!

ஆட்டோ
இந்த சிரமத்தை போக்க, ஒருசிலர் தாங்கள் ஓட்டிவரும் ஆட்டோக்கள், வேன்கள் மூலம் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள வருகின்றனர்.. இலவசமாகவே இந்த பணியை மேற்கொண்டுள்னர்.. கொரோனா பாதிக்காத வகையில் முழு கவச உடையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகளை, உரிய மருத்துவமனையில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறார்கள்.

ஆக்சிஜன்
இதில் அடுத்தக்கட்டமாக, சட்டக்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர்.. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர்..

செல்போன்
இவர்கள் "வியாசை தோழர்கள்" என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.. 24 மணி நேரமும் இலவச சேவை செய்து வருகிறார்கள்.. ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்லாமல், உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசர தேவைக்கு தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 9791858078, 7305738473 என்ற செல்போன் நம்பர்களையும் தெரிவித்துள்ளனர்.

பாராட்டு
இதன்மூலம் ஏராளமானார் சென்னையில் நேரடி பலன்பெற்று வருகிறார்கள்.. தமிழக அரசு, ஒரு பக்கம் பல நிவாரண பணிகளை செய்து வந்தாலும், தானாக முன்வந்து, மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு உதவும் இந்த வியாசர்பாடி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..!
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications