சென்னை மக்கள் கவனத்துக்கு.. இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த வழித்தடத்தில் தெரியுமா?
சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் மின்சார ரயில் சேவை பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகர் ரயில் சேவைகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கல்வி, தொழில், வேலை, வேலைவாய்ப்பு என பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கி வசித்து வருகின்றனர். சென்னையில் பிரதான பிரச்சனை என்றால் அது போக்குவரத்து நெரிசல் தான். சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் ஊரே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.

சென்னை பயணிகளுக்கு வரப்பிரசாதமாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.15, பிற்பகல் 12.10 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில்களும், காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.
மறு மாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, மாலை 5 மணிக்கும், சூலூா்பேட்டையில் இருந்து பிற்பகல் 1, 1.15, 3.10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதேபோல், ஆகஸ்ட் 2 ஆம் தேதி கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) சென்ட்ரலில் இருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக பொன்னேரியில் இருந்து பிற்பகல் 1.18, 2.48, 3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையில் இருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications