மதுரவாயலில்.. தமிழக அரசு கட்டிவரும் கழிவுநீர் தொட்டி.. யாரிந்த சரண்ராஜ்.. உடம்பெல்லாம் காயம் எப்படி?
சென்னை: சென்னை மதுரவாயலில் அரசு சார்பில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரவாயல் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ்.. 35 வயதாகிறது.. இவர் வானகரம் மீன் சந்தையில் வேலை பார்த்து வருகிறார்.. கடந்த 21-ம் தேதி காலை வெளியே சென்றவர், மறுபடியும் வீட்டுக்கு திரும்பவில்லை. எனவே, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்கள்.. ஆனால் சரண்ராஜ்ஜை கண்டுபிடிக்க முடியவில்லை.

மதுரவாயல்: இந்நிலையில், அவரது வீட்டுக்கு பக்கத்திலேயே, கழிவுநீர் தொட்டி ஒன்றில் இளைஞரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. இதனால், போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களுடன் விரைந்து சென்று உடலைமீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு, உடனடியாக போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், விசாரணையில் கழிவு நீர் தொட்டியில் சடலமாக மிதந்தது ஏற்கெனவே மாயமான சரண்ராஜ் என்பது தெரியவந்தது..

கோணங்கள்: ஆனால், அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து இந்த கழிவு நீர் தொட்டிக்குள் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காரணம், சரண்ராஜ் உடம்பில் சிறிய அளவிலான காயங்கள் இருக்கிறதாம்.. எனவே, இந்த மரணம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் குடிநீர் வாரியம் சார்பில், மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில், ராட்சத பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வருகிறது.. கழிவு நீரை வெளியேற்றுவதற்காக பம்பிங் ஸ்டேஷன்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காகவே பெருமாள் கோவில் தெருவில், புதிதாக 20 அடி அகலம், 8 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
மதுரவாயல்: தமிழக அரசின் குடிநீர் வாரியம் சார்பில், மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில், ராட்சத பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வருகிறது.. கழிவு நீரை வெளியேற்றுவதற்காக பம்பிங் ஸ்டேஷன்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காகவே பெருமாள் கோவில் தெருவில், புதிதாக 20 அடி அகலம், 8 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொட்டிக்கு மூடி இல்லாத நிலையில், பாதி அளவுக்கு இரும்புத்தகடு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதனால், இந்த பகுதியை சேர்ந்தவர்கள், நைட் நேரத்தில் இந்த தொட்டிக்கு பக்கத்தில் உட்கார்ந்துதான் மது அருந்துவார்களாம்..
துர்நாற்றம்: நேற்று காலையில் தொட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசவும்தான், அப்பகுதிவாசிகள் சென்று பார்த்திருக்கிறார்கள்.. சரண்ராஜ்ஜின் சடலம் அழுகி கிடந்திருக்கிறது. வானகரம் மீன் மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்து வருகிறாராம் சரண்ராஜ்.
மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியின் மேல்பகுதி முழுமையாக மூடப்படாமல் பாதியளவே மூடப்பட்டிருந்ததே இந்த மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. தொட்டியை முழுமையாக மூடியிருந்தால் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
கோரிக்கை: சமீபத்தில் பெய்த மழை காரணமாக 20 அடி ஆழமுள்ள தொட்டியில் 7 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது.. அதனால், தொட்டி கட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.. இந்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications