மதுரவாயல் டூ பூந்தமல்லி ரோடு.. சென்னை போலீஸையே திணறடித்த "அஞ்சலை".. பெருங்குடியில் திடீர் பரபரப்பு
சென்னை: சென்னை போலீஸையே ஒரு பெண் கிறுகிறுவென சுற்ற விட்டுள்ளார்.. யார் அந்த பெண்? என்ன நடந்தது அவரது குழந்தைக்கு?
சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை.. 27 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.. இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தையுடன் அஞ்சலை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

குழந்தை: அப்போது, குழந்தையை தூங்க வைத்து, குளிப்பதற்காக பாத்ரூம் சென்றாராம்.. அப்போது யாரோ 2 பேர் வந்து, வாடகைக்கு வீடு இருக்கிறதா? என்று விசாரிக்க வந்தார்களாம். உடனே தன்னுடைய குழந்தையை கடத்தி சென்று விட்டார்களாம்..
இப்படி ஒரு புகாரை, போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு சொன்னார் அஞ்சலை.. இதனால், மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்து, அஞ்சலையிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தல்: அப்போது, குழந்தையை யாரும் கடத்தவில்லை, பூந்தமல்லியில் உள்ள தன்னுடைய உறவினரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக சொன்னார்.. அத்துடன், பூந்தமல்லியில் உள்ள உறவினர் அட்ரஸையும் போலீசுக்கு தந்தார் அஞ்சலை. உடனே போலீசார், பூந்தமல்லிக்கு சென்று அந்த அட்ரஸில் விசாரிக்க முயன்றனர். ஆனால், அப்படி ஒரு அட்ரஸே அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதனால், மறுபடியும் போலீசார் அஞ்சலையிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது, குழந்தையை பெருங்குடியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிடுமாறு சொன்னதாக, இன்னொரு வாக்குமூலத்தை சொன்னார் அஞ்சலை. இதனால், போலீசார் திணறிவிட்டார்கள். அஞ்சலையின் ஒவ்வொரு வாக்குமூலமும் குழப்பத்தையே தந்ததால், மறுபடியும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருங்குடி: இதனிடையே, குழந்தையை நிஜமாகவே பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் வீசிவிட்டாரா? பெருங்குடியில் எங்கே வீசினார்? என்பதை கண்டுபிடிக்க, அஞ்சலையை அழைத்துக்கொண்டு, போலீசார் பெருங்குடிக்கு சென்றார்கள்.. குழந்தையையும் அங்கே தீவிரமாக தேடினார்கள்.. ஆனால், குழந்தை கிடைக்கவேயில்லை.
இந்த குழந்தை கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததா? அல்லது பெற்ற குழந்தையை வேண்டாம் என்று குப்பை தொட்டியில் வீசினாரா? அல்லது யாரிடமாவது தந்திருக்கிறாரா? குழந்தையை என்ன செய்தார்? குழந்தை உயிருடன் இருக்கிறதா? என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை..
குழந்தை எங்கே? குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டதாகவும், அந்த குழந்தை காணவில்லை என பெற்ற தாய் அளித்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், போலீசாரை பூந்தமல்லி, மதுரவாயல், பெருங்குடி என அலையவிடடு திணறடித்து கொண்டிருக்கிறாராம் அஞ்சலை.












Click it and Unblock the Notifications