மெரினாவில் உயிருக்கு போராடிய சிறுவன்.. துணிந்து காப்பாற்றி பலியான மாணவர்.. ரியல் ஹீரோ!
மெரினா கடலில் சிக்கிய சிறுவனை கல்லூரி மாணவர் ஒருவர் காப்பற்றிய நிகழ்வு பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.
சென்னை: மெரினா கடலில் சிக்கிய சிறுவனை கல்லூரி மாணவர் ஒருவர் காப்பற்றிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அந்த மாணவர் கடைசியில் கடலில் சிக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடலில் இப்போதெல்லாம் இளைஞர்கள் விழுந்து பலியாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போலீஸ் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.

இந்த நிலையில் நேற்று மெரினாவில் 15 வயது பள்ளி சிறுவன் ஒருவன் நீரில் மிதந்தபடி உயிருக்கு போராடி இருக்கிறான். அப்போது கடலுக்கு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கண்டு இருந்த பாண்டியராஜன் என்று 18 தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அந்த சிறுவனுக்கு உதவுவதற்காக கடலில் குதித்துள்ளார்.
போதுமான அளவில் நீச்சல் தெரியாது என்றாலும், வேகமாக அந்த மாணவனுக்கு உதவுவதற்காக கடலில் குதித்துள்ளார். அதேபோல் அலையில் போராடி அந்த மாணவனை காப்பாற்றி இருக்கிறார். சரியாக அந்த சிறுவனை காப்பற்றிய சமயத்தில் பெரிய அலை ஒன்று அடித்துள்ளது.
இதில் இருவரும் காணாமல் போனார்கள். இருவரும் கடலை நோக்கி அடித்து செல்லப்பட்டனர். ஆனால் உடனே அங்கே வந்த மீனவர்கள் அந்த சிறுவனை மீட்டு உள்ளனர். ஆனால் பாண்டியராஜனை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
2 மணி நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியராஜன் பட்டினப்பாக்கம் கடைக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலிகிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவரின் துணிச்சலான செயல் பலருக்கும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications