சொத்து தகராறு.. சுவர் ஏறி குதித்து வாயை பொத்தி.. அக்காவை கொன்ற தங்கை.. கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த மாங்காட்டில் சொத்தில் பங்கு இல்லை என்று சொன்ன அக்காவை கொன்று விட்டு நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தங்கையின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மாங்காடு சந்திரசேகர் நகர் பகுதியில் வசித்தவர் தெய்வானை (வயது 40). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
நேற்று இவரது தங்கை லட்சுமி, தன் அக்கா தெய்வானையை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக மாங்காடு போலீசுக்கு புகார் அளித்தார்.

புகாரை ஏற்று சம்பவ இடத்திற்கு மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தெய்வானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அக்காவை கொன்ற தங்கை

அக்காவை கொன்ற தங்கை

விசாரணையில் கூடப்பிறந்த தங்கையே அக்காவை கொன்றது உறுதியாகி உள்ளது. தன் அக்கா தெய்வானையை கொன்ற லட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அக்காவை கொன்ற தங்கை

அக்காவை கொன்ற தங்கை

விசாரணையில் கூடப்பிறந்த தங்கையே அக்காவை கொன்றது உறுதியாகி உள்ளது. தன் அக்கா தெய்வானையை கொன்ற லட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சொத்துக்கள் தரவில்லை

சொத்துக்கள் தரவில்லை

இந்நிலையில் துபாயில் இருந்து திரும்பிய தெய்வானையிடம் லட்சுமியின் கணவர் ரமேஷ் குமார் மது குடித்துவிட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் இருவரையும் வீட்டை விட்டு தெய்வானை வெளியேற்றி உள்ளார். மேலும் தான் சேமித்து வைத்த சொத்தில் பங்கு இல்லை என்றும் தெரிவித்தார். அது மட்டுமின்றி ரமேஷ் குமாருக்கு சொந்த ஊரில் அவருக்கு சொந்தமான சொத்துகளையும் அவருக்கு தர விடாமல் தெய்வானை தடுத்துவிட்டாராம்.

வாயை பொத்தினார்

வாயை பொத்தினார்

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி மற்றும் அவரது கணவர் ரமேஷ் குமார் ஆகியோர் தெய்வானை இருந்தால் சொத்துக் கிடைக்காது என்று நினைத்து அவரை தீர்த்து கட்ட சதிதிட்டம் தீட்டினர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக இருவரும் ஏறி குதித்து உள்ளே சென்று இருக்கிறார்கள். சத்தம் போடாமல் இருக்க தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக்கொண்டார்.

கையில் காயம்

கையில் காயம்

ரமேஷ் குமார் தான் எடுத்து வந்த கத்தியால் தெய்வானையை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. வாயை பொத்தியபோது தெய்வானை கடித்ததில் லட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை மறைக்க நேற்று முன்தினம் காலை மாங்காடு போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

கணவருக்கு வலை

கணவருக்கு வலை

அதில் தான் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தனது வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த புகார் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் லட்சுமி சிக்கினார். சொத்து தகராறில் உடன் பிறந்த அக்காளை கொன்று விட்டு நாடகமாடிய தங்கை லட்சுமியை கைது செய்தோம். தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷ்குமாரை தேடி வருகிறோம் என்றார்கள்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+