சென்னை மெரினா பீச்சில் இப்படியா? அதென்ன கடற்கரையெல்லாம் இவ்ளோ விழுந்து கிடக்கு.. ஓடோடி வந்த ஆபீசர்ஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் என்ன நடந்தது? எதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்?
கோடை வெயிலுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல மாதங்களாக காய்ந்திருந்த நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், நீர்நிலைகளின் நிறமும் ஆங்காங்கே மாறிவிட்டதுடன், அங்குள்ள மீன்களும் திடீர் திடீரென இறக்கும் சூழல் ஏற்பட்டது. 10 நாட்களுக்கு முன்புகூட, சென்னை கொசஸ்தலை ஆறு, கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை, நொய்யல் ஆறு என பல்வேறு இடங்களிலுள்ள நீர்நிலைகளில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்தன.
கழிவுநீர்: ஒருவேளை ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அல்லது நீர்நிலைகளில் மாசு கலந்த நீர் கலப்பதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அல்லது நிறைய சாயப்பட்டறைகள் உள்ளதால், கழிவுகள் ஆறுகளில் கலந்தும் மீன்கள் இறந்திருக்கலாம் என்றார்கள்.
நாகூர் ஆண்டவர் தர்கா குளத்திலும் மீன்கள் செத்து மிதந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் தர்கா பகுதியையும் தாண்டி, 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியதாம். எனினும் இறந்த மீன்களை அனைத்து பகுதிகளிலுமே அப்புறப்படுத்தி, அந்தந்த தண்ணீரை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
மெரீனா மீன்கள்: இப்படிப்பட்ட சூழலில் சென்னை மெரீனாவிலும் மீன்கள் இறந்துள்ளன.. மெரினா கடற்கரை மாற்றுதிறனாளிகள் அலுவலகம் எதிரே உள்ள கரையோரம் நேற்று ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியிருக்கின்றன.. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது.. இதனால், பீச்சுக்கு வந்த பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டார்கள்..
பிறகு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீன்களை அப்புறப்படுத்தினார்கள்.. மீன்கள் எதற்காக இறந்தன என்பது உடனடியாக தெரியவில்லை.. எனினும், மீன்களின் இறப்புக்கான காரணங்களை ஆராய்வதற்கு செத்து போன மீன்களை அதிகாரிகள் அதிகாரிகள் எடுத்து சென்றிருக்கிறார்கள்.
மீன்கள் இறப்பு: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, சென்னையில் அளவுக்கு அதிகமான மழைநீரானது, வடிகால் வழியாக அடையாற்றில் கலந்து, அதற்கு பிறகே கடலின் முகத்துவாரத்தில் கலக்கிறது.. இதனால் கடல்நீரின் ஆக்சிஜன் அளவு குறையும்...
கடல்நீரில் குளிர்ச்சியான மற்றும் வெப்பமான நீர் கலக்கும்போது அதன் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுவதால் மீன்கள் இறக்கும் நிலைமை ஏற்படுகிறது. எனினும் மீன்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்கிறோம்" என்றனர்.
கழிவுநீர்: ஆனால், பொதுமக்கள் வேறு காரணம் சொல்கிறார்கள்.. அதாவது, அடையாற்றின் கரை ஓரங்களில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால், கழிவுநீர் அங்கிருந்து வெளியேறி அடையாற்றில் கலக்கிறதாம்.. மழைநீர் கால்வாயில் உள்ள கழுவுநீரும் கலப்பதாலேயே மீன்கள் இறந்துவிடுகின்றன என்கிறார்கள்.. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications