மாடு முட்டியதாலே இறக்கல.. அந்த பெரியவருக்கு பிபி, சுகர் இருந்துச்சி.. மேயர் பிரியா சொன்ன விளக்கம்
சென்னை: திருவல்லிக்கேணியில் சுந்தரம் என்ற முதியவர் மாடு முட்டி மட்டுமே இறக்கவில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரத்தான முகாமை தொடங்கி வைத்த மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில் திருவல்லிக்கேணியில் மாடு முட்டிய சுந்தரத்திற்கு ஏற்கெனவே உடல்நல பிரச்சினைகள் இருந்து வந்தது. ஏற்கெனவே அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மாடு முட்டிய சுந்தரத்திற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது.

மாடு முட்டியதால் சுந்தரம் மிகவும் பயத்திலேயே இருந்துள்ளார். 80 வயது என்பதால் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாடு முட்டியதுதான் இறப்பிற்கு காரணம் என நாம் சொல்லிவிட முடியாது. அவருக்கு உடல்நல பிரச்சினைகளும் இருந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை பெற்று பின்னர் அறிவிக்கப்படும்.
மாடுகளை உரிமையாளர்கள் சாலையில் விடுகிறார்கள். அப்படி விடும்போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதனால் நாங்கள் தற்போது அபராதத் தொகையையும் அதிகரித்துள்ளோம். முதல் முறை சாலையில் மாடு பிடிபட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ 5000 அபராதம், 2ஆவது முறை பிடிபட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.
இப்படி அபராதம் விதித்தே மாநகராட்சிக்கு ரூ 78 லட்சம் வசூலாகியுள்ளது. எனவே முதல்வருடன் ஆலோசனை நடத்தி மாடுகள் மூன்றாவது முறை பிடிபட்டால் நாங்கள் ஒரு இடம் பார்த்து அந்த மாடுகளை அங்கே பிடித்து வைக்க போகிறோம். அதற்கு தேவையான உணவுகளை மாட்டின் உரிமையாளர் அந்த இடத்திற்கு வந்து தீவனங்களை கொடுத்துவிட்டு பால் கரந்து விட்டு செல்லும் வகையில் அமைக்க போகிறோம். மாடுகள் நடந்தால்தான் பால் கரக்கும் என்பதால் இதுபோல் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளுக்கு மாடுகளை விட்டுவிடுவதுதான் பிரச்சினையாக உள்ளது. மற்றபடி மாடுகளை வளர்க்கக் கூடாது என நாங்கள் யாரும் சொல்லவில்லை.
மாடுகளை சாலைகளில் விடுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் அறிய வேண்டும். எனவே மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். வீடுகள் தோறும், கால்வாய்களில் தினமும் இரு வேளை கொசு மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நாங்கள் விளம்பரத்திற்காக அடிக்கிறோம் என கூறுவது தவறு. அது போல் டெங்கு நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் என்பதால் வீடுகளில் தேங்கும் வகையில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி வருகிறோம். அபராதங்கள் விதிக்கிறோம். அது போல் கால்வாய்களில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பால்களை போடுகிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்கினால் டிரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணிகள் கடந்த ஆண்டை போல் தொடங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.
கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வடக்கு மாட வீதியில் 80 வயது முதியவர் சுந்தரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செவித் திறனற்ற மற்றும் வாய் பேச இயலாக மாற்றுத்திறனாளியாவார்.
அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மாடு, சுந்தரத்தின் மீது முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார். அவருடைய கண் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications