என்ன ஸ்பீடு.. நேரடியாக களத்திற்கே வந்தே மேயர் ப்ரியா! இதுதான் இப்போ சென்னைக்கு முக்கியம்.. சூப்பர்
சென்னை: சென்னையில் மேயர் ப்ரியா நேரடியாக களத்திற்கே வந்து முக்கியமான பணிகளை செய்ய தொடங்கி இருப்பது பெரிய கவனம் பெற்றுள்ளது.
சென்னையில் எப்போது மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த நவம்பர் - டிசம்பர் மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.

தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 - 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும்.
சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள மழை நீர் வடிகால் அமைப்புகள் காரணமாக மழை நீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. தற்போது இந்த மழை நீர் வடிகால் அமைப்புகள் பலன் அளிக்க தொடங்கி உள்ளது. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்னும் சில பகுதிகளில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் மழை காலத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி மழையில் மரங்கள் விழுவதை தவிர்க்க கிளைகளை கழிக்கும் பணிகளும், சாலை ஓரம் நீர் வெளியேற்றும் அமைப்புகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணிகளும் தொடங்கி உள்ளன.
மழை காலத்தில் காற்றில் மரங்கள் விழுவதை, சாலையில் கிளைகள் விழுவதை தடுக்க இந்த பணிகளை சென்னையில் மேயர் ப்ரியா நேரடியாக களத்திற்கே வந்து செய்து வருகிறார். இன்றில் இருந்து சென்னையில் ஒவ்வொரு ஏரியாவாக மேயர் பிரியா இந்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளார். அவரின் இந்த பணிகள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் மாலை நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் மழை தீவிரம் அடையும் முன் இந்த பணிகளை முடிப்பதற்கான வேளைகளில் அரசு இறங்கி உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் இன்றில் இருந்து 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சென்னையிலும் மழை பெய்து வருகிறது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications