காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்?
Recommended Video
சென்னை: இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயில் சென்சுரி அடித்து வருகிறது.
இருப்பினும் வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு
இந்த நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

36 மணி நேரத்தில்
அதன்படி இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

கரையை கடக்கும்
காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஃபனி புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள்
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இந்த நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மகிழ்ச்சி
சென்னையில் ஏப்ரல் 30 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications