அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும்... வானிலை மையம் அறிவிப்பு..!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஈரோடு, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் -பழனி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றிரவு 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பழனி-கொடைக்கானல் மலைசாலை அடைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிவர் புயல் மற்றும் புரேவி புயல் காரணமாக தமிழகம் முழுவதுமே கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. இதனிடையே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுமையம் முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளபடி மேற்கண்ட 5 மாவட்ட மக்கள் அடுத்த 3 மணி நேரத்துக்கு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வது உகந்தது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications