50 கிமீ வேகத்தில் மிரட்டும் புயல் காற்று.. அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் லேசான காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இதனால், சாலைகளில் நடந்து செல்வோர் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அலுவலகத்துக்கு செல்வோர் மழை காரணமாக சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் நேற்று போல் இன்றும் வானம் கருமேகத்துடன் காணப்படுகிறது. இன்றும் கனமழை பெய்ய போகிறது.

9 மாவட்டங்களில் மழை
இதனிடையே வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

டெல்டாவில் மழை
வெப்பச் சலனம், வளி மண்டலமேலடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை
அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தீபாவளியில் மழை
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.. சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழையும் பெய்யும். புதுச்சேரியை ஒட்டிய கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் பெய்து வரும் கனமழை மக்களின் பயணத்தையும், வியாபரத்தையும் பாதித்துள்ளது. இனி வரப்போகும் மழை, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையும் சேர்த்து பாதிக்கப்போகிறது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications