தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்... சென்னை வானிலை மையமும் சொல்லிடுச்சு
Recommended Video

சென்னை : அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை நவம்பர் 1 முதல் தொடங்கியுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தென்தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மழை வெளுத்துக் கட்டியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நிலவுகிறது. மாலத்தீவு பகுதியில் வளிமண்டலத்தில் மேல்அடுக்கு சுழற்சி நிலவுகிறது, மேலும் அந்தமான் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 29 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் 22 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசத்தில் 16 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 11 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில் 9 செ.மீட்டர் மழையும், சீர்காழி, பரங்கிப்பேட்டை, கும்பகோணம், வேதாரண்யம், குளச்சல், ஒட்டப்பிடாரத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும், வடதமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications