நற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை எப்போதும் வேண்டுமானாலும் தொடங்கலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
தமிழகத்தின் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு அட்டவணையை சென்னை வானிலை மையம் கொடுத்துள்ளது. அதில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

மிதமானது
புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, குமரி ஆகிய மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை
அது போல் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பிருந்த நிலையில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மிதமான மழை பெய்யும் என அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

திரவ உணவு
இவற்றை தவிர்த்து மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும். சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் குறைந்து காணப்படுகிறது. எனினும் அதிக அளவிலான புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். நீர் சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர், திரவ ஆகாரங்களை அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications