சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்டுத்தாக்கும் கனமழை..! தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    பருவமழைக்கு தயாராகும் சென்னை.. நேரில் சென்று பார்வையிட்ட Chief Secretary Iraianbu

    மழைக்காலம் தொடங்கியது முதலே கடந்த தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள ஏரி, குளம் உட்பட அனைத்து நீர்ப்பிடி பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    Chennai Meteorological department says rain will continue across many districts for the next 5 days

    கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழையும் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேபோல நாளை வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி (நாளை மறுநாள்) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வரும் 24 மற்றும் 25ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும் கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பகலில் தெளிவாகக் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Tamilnadu metrology department's latest report. many districts in Tamilnadu to recieve heavy rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X