சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் அதி கனமழை?- வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலிருந்து 180 கி.மீ. தூரத்தில் மாண்டஸ் புயல் நிலவி வருகிறது என்றும் இன்று மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ. வரை வீசக் கூடும் என்றும் வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (08.12.2022) தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல், நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (09.12.2022) காலை 08.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி.மீ. தென்-தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - -புதுவை தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரத்திற்கு அருகே, இன்று நள்ளிரவு - நாளை (10.12.2022) அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

Chennai meteorological department says that Mandous cyclone in 180 kms away from chennai

இதன் காரணமாக, 09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்., தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.12.2022 & 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை :

09.12.2022 : வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் 09.12.2022 மாலை முதல் படிப்படியாக உயர்ந்து 10.12.2022 காலை வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையிலிருந்து இன்று இரவு அரசுப் பேருந்துகள் ரத்து.. தமிழக நிலவரம் என்ன? மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையிலிருந்து இன்று இரவு அரசுப் பேருந்துகள் ரத்து.. தமிழக நிலவரம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமானது / கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சென்னை AWS, மாதவரம் AWS (திருவள்ளூர்), CD மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை), சென்னை (நுங்கம்பாக்கம்), சென்னை (மீனம்பாக்கம்), AWS மீனம்பாக்கம், ARG YMCA நன்னாடன் (சென்னை) தலா 7, பெரம்பூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), ARG புழல் (திருவள்ளூர்) தலா 6, எம்ஜிஆர் நகர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ARG தரமணி (சென்னை), ARG ACS கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 5, சென்னை ஆட்சியர் அலுவலகம், ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), அம்பத்தூர் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ARG MRC நகர் ( சென்னை), ARG குட்வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 4, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பாம்பன் (ராமநாதபுரம்), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), தாளணையார் (நாகப்பட்டினம்), ARG பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 3, பூந்தமல்லி (திருவள்ளூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), சோழவரம் (திருவள்ளூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), காரைக்கால், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தொண்டி (ராமநாதபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), சின்னக்களர் (கோயம்புத்தூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), சோத்துப்பாறை (தேனி), திருக்குவளை (நாகப்பட்டினம்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ராமநாதபுரம்) தலா 2, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), , (திருவாரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஆர்.எஸ்.மங்கலம் (இராமநாதபுரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கங்கவல்லி (தஞ்சாவூர்), (மயிலாடுதுறை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாடானை (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), பேராவூரணி (தஞ்சாவூர்), கொடைக்காடு கிளப், கொடைகாடு கிளப் பரமக்குடி (ராமநாதபுரம்), புதுச்சேரி (புதுச்சேரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), கடலாடி (ராமநாதபுரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வாலினோகம் (இராமநாதபுரம்), நன்னிலம் (திருவாரூர்), தீர்த்தாண்டதானம் (இராமநாதபுரம்), மன்னார்குடி (திருவாரூர்), கமுதி (இராமநாதபுரம்), வட்டானம் (ராமநாதபுரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), புதுக்கோட்டை), மணல்மேடு (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூர்), வால்பாறை PTO (கோவை), நாகுடி (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 09.12.2022 - சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, இன்று(09.12.2022 ) மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 10.12.2022 காலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 10.12.2022 மாலை முதல் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள்: சூறாவளிக்காற்று இன்று (09.12.2022) மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 09.12.2022 நண்பகல் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10.12.2022 காலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 10.12.2022 மாலை முதல் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா பகுதிகள்: 09.12.2022 சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.12.2022 மாலை முதல் 10.12.2022 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று (09.12.2022) நண்பகல் வரை வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்று மாலை முதல் 10.12.2022 காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 10.12.2022 மாலை முதல் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
Chennai Meteorological department says that Mandous cylone located 180 km faraway from Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X