Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மற்றொரு சாதனை! இந்திய அளவில் 2 தேசிய விருதுகள் வென்ற சென்னை மெட்ரோ.. நாட்டை வியக்க வைத்த வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைவாசிகளின் தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன மெட்ரோ ரயில்கள். இன்று மெட்ரோ இல்லாத சூழலை நினைத்து பார்க்கவே முடியாது.. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. இதனால் மெட்ரோ ரயில்களுக்கான தேவைகளும் அதிகரித்தவாறே உள்ளன.. இந்நிலையில், மீண்டும் ஒரு சாதனையை சென்னை மெட்ரோ பெற்றுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,.

Chennai Metro Two National Awards 2

அப்போது முதல் இப்போதுவரை சென்னையில் மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்தபடியே வருகிறது. அதனால்தான், மெட்ரோ சேவையின் விரிவாக்கமும் துரிதமாகி வருகிறது.

போக்குவரத்து சாதனை

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காகவும், சென்னை மக்கள் அதிகம் நாடுவது, மெட்ரோ ரயிலாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது.. எனவேதான் மெட்ரோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது..

மெட்ரோவில் மக்களின் பயன்பாட்டு எண்ணிக்கை குறித்து, மெட்ரோ நிறுவனமானது, முக்கிய தகவல்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியவர்களின் மாதாந்திர எண்ணிக்கையையும் வெளியிட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்

அந்தவகையில், மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 1,01,46,769 பயணிகளும் மெட்ரோவில் பயணித்திருக்கிறார்கள். இதில் ஜூலை மாதம் அதிகபட்ச பயணிகளைக் கொண்ட மாதமாக அமைந்தது. இதில் அதிகபட்சமாக, 2025 அக்டோபர் 17 ம் தேதி மட்டும் 4,02,010 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்களாம்.

மற்றொரு சாதனை

இந்நிலையில், மற்றொரு சாதனையை சென்னை மெட்ரோ படைத்துள்ளது.. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் வழங்கப்படும் 2 முக்கிய தேசிய விருதுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வென்றுள்ளது..

ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா மாநாடு நிறைவு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனம் என்ற விருதும், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் என்ற பிரிவில் பாராட்டு சான்றிதழும் சென்னை மெட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சபாஷ் சென்னை மெட்ரோ

மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் இணை அமைச்சர் தோக்கன் சாகு விருதுகளை வழங்க, தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால் மற்றும் சென்னை மெட்ரோ மேலாண்மை இயக்குனர் எம். ஏ. சித்திக் ஆகியோர் சென்னை மெட்ரோ சார்பில் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர். இது சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் சிறப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+