சிறுசேரி, OMR-ல் தங்கம் ஆகப்போகும் நிலம்! சென்னை மெட்ரோ 2-ம் கட்ட விரிவாக்கம்.. 2026-ல் ஜாக்பாட்
சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் (Chennai Metro Phase 2) மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ஆகியவற்றால் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் (Real Estate) சந்தை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.. குறிப்பாக 2026-ல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், பூந்தமல்லி, ஓஎம்ஆர் மற்றும் மாதவரம் ஆகிய இடங்கள் முதலீட்டாளர்களின் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளன.. வரவிருக்கும் போக்குவரத்து மாற்றங்களால் இந்த பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது..
சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் தற்போது முக்கிய வழித்தடங்களில் வேகமாக முன்னேறி வருகின்றன.

சென்னை போக்குவரத்து தேவைகள்
நகரின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.. 2026-ம் ஆண்டு முதல் சில முக்கிய வழித்தடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் கவனிக்கப்படுகின்றன..
மெட்ரோ நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் மற்றும் வீட்டு சந்தையில் மாற்றங்கள் காணப்படுவதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 3 முக்கிய வழித்தடங்கள் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளன.. முதலாவதாக, பூந்தமல்லி முதல் திருமழிசை வரையிலான வழித்தடம் குறிப்பிடப்படுகிறது.
ஓஎம்ஆர் - சிறுசேரி மெட்ரோ
இந்த பகுதி மேற்கு சென்னையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதனுடன் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் இணைந்திருப்பதால், எதிர்காலத்தில் போக்குவரத்து இணைப்புகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
2வதாக ஓஎம்ஆர் தகவல் தொழில்நுட்ப மண்டலத்தில் சிறுசேரி வரையிலான மெட்ரோ நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த பகுதி ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு மையமாக இருப்பதால், மெட்ரோ சேவை தொடங்கும்போது பயண வசதி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடகை வீடுகள் மற்றும் நிலங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
3வதாக மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் இடையிலான இணைப்பு வழித்தடம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்த திட்டம் நிறைவடைந்தால் சென்னை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் நேரடி மெட்ரோ சேவையால் இணைக்கப்படும்.. இதன் மூலம் பயண நேரம் குறையக்கூடும் என்றும் நகரின் பல பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்
வழக்கமாக ஒரு நகரில் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் போது அந்த பகுதிகளில் நிலம் மற்றும் வீட்டு தேவைகள் அதிகரிக்கும் என்பது ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் நடைமுறையாகும்.. மெட்ரோ நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தேவை அதிகமாக இருக்கும் என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து மக்கள் எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுக்கும் முன் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ மெட்ரோ வரைபடங்கள் மற்றும் அறிவிப்புகளை சரிபார்த்து செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகிறது.. திட்டங்கள் திட்டமிட்ட காலத்தில் நிறைவடைந்தால், இந்த வழித்தடங்கள் சென்னை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications