சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம்! கோயம்பேடு - பட் ரோடு சேவை எப்போது தொடக்கம்! ஓராண்டுக்கு முன்பே அதிரடி!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முக்கியப் பகுதியான கோயம்பேடு முதல் பட் ரோடு (பரங்கிமலை) வரையிலான 12 கி.மீ தூரப் பாதை, வரும் ஜூன் மாதம் (June 2026) திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உண்மையில் 2027 ஜூன் மாதம்தான் இதற்கான 'டெட்லைன்'. ஆனால், பணிகளை விரைவுபடுத்தி ஓராண்டுக்கு முன்பே இதை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சி.எம்.ஆர்.எல் (CMRL) முடிவு செய்துள்ளது.

இந்த வழித்தடத்தின் சிறப்பம்சங்கள்
எந்தப் பகுதி?: இது மாதவரம் - சோழிங்கநல்லூர் (Corridor-5) வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இதில் மொத்தம் 13 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.
பயனடையப் போகும் பகுதிகள்: விருகம்பாக்கம், மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதி மக்கள் இனி நகரின் மையப்பகுதிக்கு எளிதாகச் சென்று வரலாம்.
'டபுள் டக்கர்' இணைப்பு: ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய 4 நிலையங்களில், இந்த ரயில் பாதை பூந்தமல்லி - வடபழனி பாதையுடன் இணைகிறது.
ஸ்கைவாக் வசதி: கோயம்பேட்டில் 2-ம் கட்ட நிலையத்தை, ஏற்கனவே உள்ள 1-ம் கட்ட நிலையத்துடன் இணைக்கப் புதிய நடைமேம்பாலம் (Skywalk) அமைக்கப்படவுள்ளது.
யாருக்கு லாபம்?
ஐடி ஊழியர்கள்: போரூர் ஐடி காரிடார் (Porur IT Corridor) செல்பவர்களுக்குப் பெரிய நிம்மதி கிடைக்கும்.
வியாபாரிகள்: கோயம்பேடு மார்க்கெட் செல்பவர்கள் மற்றும் சென்னை வர்த்தக மையத்திற்கு (Trade Centre) வருபவர்களுக்குப் பயணம் எளிதாகும்.
டிராஃபிக் இருக்காது: மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் பீக் ஹவர்ஸில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
b 2-ம் கட்டத்தின் முதல் சேவையான பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி இடையிலான 14.5 கி.மீ தூரப் பாதை, வரும் பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications