கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. சென்னையில் இந்த ஏரியாவில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயரும்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வருட காத்திருப்புக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயிலின் விமான நிலையம்-கிளாம்பாக்கம் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, ரூ. 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையில் முக்கியமான பல பகுதிகளின் நில மதிப்பு புதிய உச்சத்தை அடைய போகிறது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பாக ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் செயல்முறையை மெட்ரோ தொடங்கி உள்ளது. 15.5 கிமீ தூரத்திற்கு சென்னை விமான நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது.

Chennai Metro Rail expansion from Airport to Kilaampakkam How will it increase real estate value

இந்த விமான நிலையம்-கிளாம்பாக்கம் வழித்தடமானது, 15.46 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்படும். ஜி.எஸ்.டி., சாலையில், முழுவதுமாக உயர்த்தப்பட்ட பாதையாக இது அமைக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, திரு வி கா நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நில மதிப்பு எங்கெல்லாம் உயரும்?

இதனால் பின்வரும் பகுதிகளில் நிலமதிப்பு வெகுவாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பல்லாவரம்,

குரோம்பேட்டை,

திரு வி கா நகர்,

தாம்பரம்,

இரும்புலியூர்,

பெருங்களத்தூர்,

வண்டலூர்,

அண்ணா உயிரியல் பூங்கா,

கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் நிலம் மதிப்பு உயரும்.

எவ்வளவு மதிப்பு உயரும்?

பல்லாவரம் - 40- 50 % மதிப்பு உயரும்.

குரோம்பேட்டை - 25- 40 % மதிப்பு உயரும்.

திரு வி கா நகர் - 25- 40 % மதிப்பு உயரும்.

தாம்பரம் - 50-60% மதிப்பு உயரும்.

இரும்புலியூர் - 40- 50 % மதிப்பு உயரும்.

பெருங்களத்தூர் - 50-60% மதிப்பு உயரும்.

வண்டலூர் - 25- 40 % மதிப்பு உயரும்.

அண்ணா உயிரியல் பூங்கா - 40- 50 % மதிப்பு உயரும்.

கிளாம்பாக்கம் - 50-60% மதிப்பு உயரும்.

எவ்வளவு செலவாகும்?

குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் போன்ற நகரின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களின் பயணத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில், ₹9,335 கோடி மதிப்பீட்டில் இந்த மெட்ரோ கட்டப்படும், விமான நிலையம்-கிளாம்பாக்கம் வழித்தடமானது, சென்னைவாசிகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும். டிசம்பர் 2023 இல் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட பிறகு இந்த வழித்தடத்தின் தேவை மிகவும் அதிகமாகி உள்ளது; கிளாம்பாக்கம் டெர்மினஸில் இருந்து பேருந்துகளில் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையில் பயணிக்கின்றனர்.

நிலம் கையகப்படுத்த முடிவு

இந்த மெட்ரோ பெரும்பாலும் ஜிஎஸ்டி சாலையைப் பின்பற்றி அதே ரூட்டில் அமைக்கப்படும். இதனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகள் இருக்காது. இந்த திட்டத்திற்கு தேவையான 28 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது என்றும், மீதமுள்ள 30 ஏக்கர் பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமானது என்றும் CMRL உறுதி செய்துள்ளது. பல்லாவரம் மற்றும் பெருங்குளத்தூர் அருகே உள்ள தனியார் நில உரிமையாளர்களுடனும், விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை பெறவும் மத்திய அதிகாரிகளுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+