கோயம்பேடு வழியாக அசோக் நகர் போறீங்களா? சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக வாகன போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மாறாக போக்குவரத்து எளிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நகரின் அனைத்து பகுதியில் வசிக்கும் மக்களையும், நகரின் மையத்துடன் கனெக்ட் செய்யும் வகையில், புதிய பாதைகளில் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

எனவே தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் வாகன போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், தற்போது மெட்ரோ ரயில் சேவையிலும் மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, செப்.15 முதல் செப். 19 வரை, கோயம்பேடு முதல் அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்காது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ நிலையம் இடையே, காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். விமான நிலையம், தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
எனவே அதிகாலையில் ஆம்னி பஸ்ஸில் கோயம்பேடு வந்திறங்கும் பயணிகள் அவசர அவசரமாக அசோக் நகர் போக மெட்ரோ ரயிலை பிடிக்க வேண்டாம். மாறாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் இணைப்பு பேருந்தை பயன்படுத்தவும். செப்.19ம் தேதி வரை மட்டுமே ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என்பதால் பயணிகள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல சென்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்து பிடிக்க வரும் பயணிகள், மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் பேருந்தில் பயணித்தால் எளிதாக வந்து சேரலாம்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications