மிரட்டுது மெட்ரோ.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குள் இனி மெட்ரோ ரயில் போகுமாம்! அதுவும் நம்ம சென்னையில்!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வணிக வளாகம் வழியே மெட்ரோ ரயில் செல்லும் வகையில் கட்டப்பட உள்ளது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தான் இந்த ஒன்பது மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதன் டிசைன்கள் குறித்த புகைப்படங்களும் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தின நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.

தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது சென்னை எழும்பூர் விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் பல புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் வசதிகள் இல்லாததால் இரண்டாம் கட்டமாக தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 63 ஆயிரத்து 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூர பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகம் வழியே மெட்ரோ ரயில் செல்லும் வகையில் மெட்ரோ வழித்தடம் அமைய இருக்கிறது. அதுவும் சென்னை திருமங்கலத்தில் தான் இந்த மெட்ரோ ரயில் வணிக வளாகம் அமைய இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 மாடி கட்டிடமாக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட இருக்கிறது.
இதில் மூன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட ரயில் நிலையம் வருகிறது. வணிக கட்டிடங்களின் நான்காவது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையமும், ஐந்தாவது மற்றும் ஆறாவது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 6 லட்சம் சதுர அடியில் இந்த பணிகள் நடைபெற இருக்கிறது.
இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த கட்டிடத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள், அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் ஆகியவை அமைக்கப்படுகிறது. வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications