கிண்டி அடியோடு மாறுது. சென்னை மெட்ரோ பிரம்மாண்ட முடிவு.. 1.5 லட்சம் பேருக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையின் முக்கிய பஸ் நிலையங்களை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிராட் வேயில் ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டிருக்கிறது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் இரண்டு வழித்தடங்களில் ஓடுகிறது. பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலும் (வடபழனி, அண்ணா நகர் வழியாக), விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் ஓடுகிறது. இந்த வழித்தடங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடி அளவிற்கு பயணிகள் பயணிக்கிறார்கள்.

இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. 3வது, 4வது, ஐந்தாவது வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை கட்டுப்பாட்டில் எடுத்துள்ள சென்னை மெட்ரோ, அவற்றை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிராட் வேயில் ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை கூட்டாக ஈடுபட்டு வருகிறது. இதில், ஒருங்கிணைந்த போக்குவரத்து முனைய கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்கிறது. அதேபோல் மந்தைவெளி பேருந்து பணிமனை உள்பட பல்வேறு பேருந்து நிலையங்களும் வணிக வளாகங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள மிக முக்கியமான ரயில் மற்றும் பேருந்து நிலையம் அமைந்துள்ள கிண்டியிலும் போக்குவரத்து முனையம் அமைகிறது. கிண்டியை சுற்றி ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் இருக்கிறது.
இதனால் கிண்டி ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். நாள் தோறும் 1 ½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பகுதியைப் பயன்படுத்துகிறார்கள். கிண்டியில் மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளால் முக்கியமான சந்திப்பாக இருக்கிறது.
எனவே, கிண்டி ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. கிண்டி பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. சாத்தியக்கூறு அறிக்கையுடன், விரிவான திட்ட அறிக்கை, நில பயன்பாடு ஆகிய பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, கிண்டி பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வணிக வளாகங்கள், கிண்டி மெட்ரோ நிலையம், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிரம்மாண்ட நடைமேம்பாலம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் போது கிளாம்பாக்கம், அண்ணா சதுக்கம், கோயம்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முடியும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications