மூடப்பட்டிருக்கும் கதவை திறந்தால்.. ரூ.5000 வெச்சுக்குங்க.. இந்த நம்பரை நோட் பண்ணுங்க.. சென்னை மெட்ரோ
சென்னை: பீக் ஹவர் என்று சொல்லப்படும் நேரத்தில், மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் சிலர் அத்துமீறிவிடுவதால், முக்கிய எச்சரிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ நிறுவனமும் பல்வேறு வசதிகளையும், புதுபுது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.. எனினும், நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அலுவல் நேரங்களில் காலை மாலை இருவேளைகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் கூட்ட நெரிசல் காணப்படுகிறது..
பீக் ஹவர்ஸ்: இந்த நெரிசல் காரணமாக, ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிடுகிறது.. சிலசமயம், ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களும் பயணிகளால் ஏற்படுகிறது.
மேலும் கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக, கதவுகள் மூடப்பட்டவுடனேயே, கதவுகளை திறக்க பயணிகள் முயற்சிப்பது , தானியங்கி கதவுகள் மூடும்போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது இப்படியான ஆபத்தான செயல்களிலும் பயணிகள் ஈடுபடுவதாகவும், இதனால் அலுவல் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடும் எச்சரிக்கை: அதுமட்டுமல்ல, பயணிகளால் ஏற்படும் இத்தகைய சூழ்நிலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது,
அதன்படி, ரயிலின் இயக்கத்தை தடுப்பது, தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, 4 வருடங்கள் வரை ஜெயில் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.. இதைத்தவிர, ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதற்காகவே, பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மெட்ரோ அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால்,...பயணியர் வாடிக்கையாளர் உதவி எண் 18604251515க்கு உடனடியாக தெரிவிக்கலாம்.
கனமழை: ஏற்கனவே, சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க புகார் எண் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதல், ஆங்காங்கே குடிநீரில் மழை கழிவுநீர் கலக்கப்படுவதாக புகார் கிளம்பியது.
இதனையடுத்து, குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம், அறிவித்திருந்ததுடன், 044 4567 4567 என்ற புகார் எண் அல்லது கட்டணமில்லா எண்ணான 1916-ஐ அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இப்போது, மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பது, சிரமம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், 18604251515 என்ற நம்பருக்கு புகார் தரலாம் என்று பொதுமக்களை மெட்ரோ கேட்டுக் கொண்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications