20 நிமிட இடைவெளி- 25 கிமீ வேகம்.. வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் எப்போது தொடங்கும்?
சென்னை சென்னை மக்கள் நீண்ட நாட்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று எதிர்பார்த்த வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை, தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் வருவது உறுதியாகி உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள 11 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் பூந்தமல்லி முதல் போரூர் எல்லா ரயில் நிலையங்களிலும் நிற்கும், அதேநேரம் போரூக்கு அடுத்து எங்குமே நிற்காமல் நேரடியாக வடபழனியில் தான் நிற்கும்.. எப்படி ரயில்கள் விடப்படும் என்பைத விரிவாக பார்ப்போம்.
சென்னை மாநகரத்தில் பேருந்துகள் இதற்கு மேல் விடவே முடியாத அளவிற்கு வாகன நெருக்கம்அதிகமாக இருக்கும். எல்லை மீறி வாகன பெருக்கம் இருக்கிறது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிப்பதால் நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சென்னையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தற்போதைய அதிகபட்சமான தேவையை கருத்தில் கொண்டும் மெட்ரோ ரயில் சேவைகள் போர்க்கால அடிப்படையில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

நல்ல வரவேற்பு
அந்த வகையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது மாதத்திற்கு சுமார் ஒரு கோடி அளவிற்கு பயணிகள் பயணிக்கிறார்கள். இதனால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2-வது கட்டமாக 118.9 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை அமைத்து வருகிறது.
பணிகள் எப்படி
இதில் 3-வது வழித்தடம் தான் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரம் உள்ள மஞ்சள் நிற வழித்தடம்.இந்த வழித்தடத்தில் தான் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தில் ஓடப்போகும் முதல் மெட்ரோ ரயில் வழித்தடம் ஆகும். மெட்ரோ ரயில் பணிகளை பொறுத்தவரை பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரை உயர்மட்டப்பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதே நேரம் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி வரை உள்ள ரயில் நிலைய பணிகள் நிறைவடையவில்லை.
பாதுகாப்பு சான்றிதழ்
இதனால் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் வரை உள்ள 10 ரயில் நிலையங்களிலும் ரயில் சேவையை தொடங்க இருக்கிறது. ஆனால் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ரயில் நிலைய பணிகள் நிறைவடையாததால் போரூரில் இருந்து புறப்படும் ரயில் 11-வது ரயில் நிலையமான வடபழனியில்தான் நிற்கும். மொத்தத்தில் 15.8 கி.மீ. தூரத்துக்கு பயணிகள் போக்குவரத்தை தொடங்குவதற்கு 'பாதுகாப்பு சான்றிதழ்', ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி கடந்த மாதமே வழங்கிவிட்டார்.
11 ரயில் நிலையங்களில் வசதிகள்
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் ஜங்ஷன், வடபழனி உள்ளிட்ட 11 நிலையங்கள் இருக்கின்றன. இங்கு பயணிகளுக்கு தேவையான நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளில்லாத 10 மெட்ரோ ரயில் முதலில் இயக்கப்பட உள்ளது.
ஜூன் மாதம் முழுமையாக திறக்கப்படும்
இதில் என்ன ஒரே ஒரு சிக்கல் என்றால், இந்த மெட்ரோ ரயில் போரூருக்கு அடுத்து வடபழனியில் தான் நிற்கும். போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ஆலப்பாக்கம், கருப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் ஆகிய 5 ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, தற்போது சிவில் வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து படிப்படியாக ஒவ்வொரு ரயில் நிலையமும் திறக்கப்படும். குறிப்பாக, வருகிற ஜூன் மாதத்துக்குள் போரூரில் இருந்து வடபழனி வரை உள்ள அனைத்து பணிகளும் முழுமை பெறும் என்று கூறப்படுகிறது. எனவே அப்போதுதான் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லும்.
20 நிமிட இடைவெளி- 25 கிமீ வேகம்
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, இந்த பூந்தமல்லி வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திறக்கப்பட உள்ளது. பூந்தமல்லி பைப்பாஸ் முதல் வடபழனி வரை ரயில்கள் ஓடும் என்றாலும்,போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை ரயில் நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், அந்த தடத்தில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் 20 நிமிட இடைவெளியில் வடபழனி வரை ரியில்கள் இயக்கப்படும் என்றார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications