"குலுங்குது" சென்னை.. தாகத்தில் திணறும் "தென்சென்னை".. மெட்ரோ லாரி ஸ்டிரைக் வேற.. குமுறும் பெண்கள்
சென்னை: சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் அறிவித்துள்ள திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவி வருகிறது.
லாரிகளுக்கு போதிய தண்ணீர் வழங்கவில்லை என்று கூறி மெட்ரோ லாரிகள் தரப்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளன..
அதுமட்டுமல்ல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் 2 தண்ணீர் நிரப்பும் நிலையங்களில், ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது.. இதை இன்னும் சரி செய்யவில்லை.. எனவே, தண்ணீர் நிரப்பும் லாரிகள், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது..

கோடம்பாக்கம்: இதனால் கோடம்பாக்கம், தி-நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவி வருகிறது. கோடம்பாக்கம் தவிர, தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாகவே தண்ணீர் விநியோகம் இல்லை என்கிறார்கள்... இந்நிலையில், லாரி ஓனர்கள் இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.
தண்ணீர் இல்லை: இதையடுத்து, தென்சென்னை பகுதி மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.. இதுகுறித்து குடும்பத் தலைவிகள் சொல்லும்போது, "4வது நாளாக இந்த ஏரியாவில் தண்ணீர் வரவில்லை.. வீட்டில் சமைக்ககூட தண்ணீர் இல்லை.. தண்ணி இல்லாவிட்டால் என்ன செய்றது? இந்த ஏரியாவில் இருப்பதே மொத்தம் 3 பைப்புகள்தான்.. வரும் தண்ணீரும் எங்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.. அதனால், கேன் தண்ணீரில்தான் சமைக்கிறோம்.
1500 வீடுக்ளுக்கு மேல் இங்கிருக்கிறது.. நாங்கள் எல்லாம் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம்.. இந்த பொதுகுழாயில் தண்ணீர்பிடித்துதான் நாங்கள் மற்ற வேலையை பார்க்க வேண்டி உள்ளது.. குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும், கணவனை வேலைக்கு அனுப்பனும், தண்ணீர் வராமல் எப்படி சமைத்து நேரத்துக்கு அனுப்புவது? நாங்கள் பெரும்பாலானோர், வேலைகளுக்கு போகிறோம்..
என்னங்க பண்றது: எங்க வீட்டு வேலையை பார்த்துக் கொண்டு, இன்னொரு வீட்டு வேலைகளையும் பார்க்க முடியல.. உடம்பு சரியில்லாமல் எத்தனையோ பேர் இங்கே உள்ளார்கள்.. தண்ணி இல்லாமல் எல்லாவற்றிற்கும் சிரமமாக இருக்கிறது " என்று குமுறுகிறார்கள்.
இதனிடையே, இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் சொல்லும்போது. "போரூர் அருகே குழாய்கள் இணைப்பு வேலை நடந்து வருகிறது.. அதனால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. நாளை இந்த நிலைமை சீராகிவிடும்.. ஆனால் மெட்ரோ வாட்டர் வேலைநிறுத்தத்தினால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரச்சனையில்லை: ஏற்கனவே சென்னையில், பஸ் போக்குவரத்தை திடீரென நடத்தி, பொதுமக்களை நடுவழியில் நிறுத்திவிட்டார்கள்.. இப்போது மெட்ரோ குடிநீர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது.. இன்னும் என்னென்ன அவஸ்தையை அனுபவிக்க போகிறோமோ என்று நொந்து சொல்கிறார்கள் சென்னைவாசிகள்..!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications