மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ?
சென்னை: பொதுவாக சாக்கடைத் தண்ணீரையோ அல்லது கழிவுநீரையோ சுத்திகரிப்பது என்பது சுற்றுச்சொழலைப் பாதுகாப்பதற்கான ஒரு வழி என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், அந்த "வேஸ்ட்" தண்ணீரைக் கொண்டே கடந்த 5 வருடத்தில் 551 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, சென்னை குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) அசத்தி உள்ளது. இது எப்படி சாத்தியமானது.. இந்ததிட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
எப்படிச் சாத்தியமானது
சென்னை கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் தலா 45 எம்.எல். கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மணலி, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மெட்ரோ வாட்டர் விற்பனை செய்து வருகிறது.

கடந்த 5 வருட லாபக் கணக்கு:
2020-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 550.56 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 74,249 மில்லியன் லிட்டர் குடிநீர் சேமிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை நகரத்தின் இரண்டு மாதத் தேவைக்கான தண்ணீரை இந்தத் திட்டம் மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளது.
விலை எவ்வளவு?
மணலி தொழிற்சாலைகளுக்கு ஒரு கிலோ லிட்டர் தண்ணீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் விற்பனை மூலம் மட்டும் மாதம் 7.63 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதுதவிர, பூங்காக்கள் மற்றும் செடிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் மாதம் 1.80 கோடி ரூபாய் சென்னை குடிநீர்வாரியத்திற்கு கிடைக்கிறது.
இன்னும் அதிக வாய்ப்பு
தற்போது சென்னையில் தினமும் 900 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. இதில் வெறும் 13% கழிவுநீர் மட்டுமே தற்போது மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் இந்த அளவை அதிகப்படுத்த மெட்ரோ வாட்டர் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக கேகே நகர் அருகே நெசப்பாக்கம் போன்ற பகுதிகளில் பாதாளச் சாக்கடை கட்டமைப்பை வலுப்படுத்தப் புதிய டெண்டர்கள் விடப்பட உள்ளது. கழிவுநீரைச் சொத்தாக மாற்றும் இந்த முயற்சி, சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கப் பெரிய அளவில் உதவும்.
3390 கோடி வருமானம் ஈட்டலாம்
13 சதவீதம் நீரை சுத்திகரித்து 530 கோடி வருமானம் ஐந்து வருடத்திற்கு ஈட்டினால், 80 சதவீதம் அளவிற்கு கழிவுநீரை சுத்திகரித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் கிடைக்கும் தெரியுமா? சென்னை மெட்ரோ வாட்டர் தனது சுத்திகரிப்புத் திறனை 80% ஆக உயர்த்தினால், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ₹3,390 கோடி வருமானம் ஈட்ட முடியும். மெட்ரோ வாட்டர் 80% இலக்கை எட்டினால், வருடத்திற்கு மட்டும் சுமார் ₹678 கோடி வருமானம் கிடைக்கும். இது தற்போதைய வருட வருமானமான ₹110 கோடியை விட 6 மடங்கு அதிகமாக இருக்கும்.
குடிநீர் தேவை குறையும்
தற்போது 13% மூலமாகவே சென்னைக்கு 2 மாதத்திற்குத் தேவையான குடிநீர் மிச்சமாகிறது என்றால், 80% சுத்திகரிப்பு நடக்கும்போது வருடத்தின் பாதி நாட்களுக்குத் தேவையான (சுமார் 6 மாதங்கள்) நன்னீர் தொழிற்சாலைகளுக்குச் செல்லாமல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கே மிச்சமாகும். ஆனால் 13%-ல் இருந்து 80%-க்கு உயர்த்துவதற்கு இன்னும் பல புதிய TTRO ஆலைகளைக் கட்ட வேண்டும். அதேநேரம் இப்படி செய்தால் கழிவுநீர் மொத்தமாக கலக்காமல் சுத்தமான சென்னையும் கிடைக்கும்.
ஆறுகள் சுத்தமாகும்
ஏனெனில் சென்னையில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பெரும்பாலும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில்தான் கலக்கிறது. 80% நீரைச் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிட்டால், இந்த ஆறுகளில் சாக்கடை கலப்பது நின்றுவிடும். சிங்கப்பூர் அல்லது லண்டன் நகரங்களில் இருப்பது போல, சென்னையின் ஆறுகளும் துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக மாறும்.
நிலத்தடி நீர் மாசுபடாது
கழிவுநீர் நிலத்தில் தேங்காமல் சுத்திகரிக்கப்படுவதால், நிலத்தடி நீர் மாசுபடுவது குறையும். சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரிகளில் விட்டால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கோடை காலத்திலும் கிணறுகளில் தண்ணீர் இருக்கும். சாக்கடை நீர் தேங்குவது குறைந்தால், கொசுத்தொல்லை மற்றும் தொற்றுநோய்கள் (டெங்கு, மலேரியா) பெருமளவு குறையும். இது சென்னை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மருத்துவச் செலவுகளையும் குறைக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications