சென்னைவாசிகளே.. அக்டோபர் 1 முதல் மூடப்போறாங்க.. மாறுது எல்லாமே.. சென்னை மாநகராட்சி மேஜர் முடிவு
சென்னை: சென்னைவாசிகளே, சென்னை மாநகராட்சி ஒரு முக்கியமான முடிவினை எடுத்துள்ளது. அதாவது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னையில் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை ரொக்கமாக வாங்க மாட்டார்களாம். டிஜிட்டல் முறையில் தான் பெறுவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல லட்சம் வீடுகள் உள்ளன. இதேபோல் பல ஆயிரம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னை குடிநீர்வாரியம் இவர்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி உள்ளது. இதேபோல் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவு நீர் இணைப்பும் வழங்கி உள்ளது- இதற்கான கட்டணங்களை வீட்டு உரிமையாளர்கள், ஒவ்வொரு முறையும் செலுத்த வேண்டும்.

இதற்கான கட்டணங்களை சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் இதுவரை மக்கள் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் எதிர்வரும் 1ம் தேதி முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்புக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை அக்டோபர் 1ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல்/ காசோலை/ வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும் என்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை/ வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் தங்களது பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications