வாடிய முகத்துடன் வந்த மகள்.. அதிர்ந்து பார்த்த போலீஸ்.. சென்னை மயிலாப்பூர் தம்பதி சிக்கியது எப்படி?
சென்னை: மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மட்டும் இல்லாமல் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த தம்பதியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.. இந்த தம்பதி எப்படி சிக்கினார்கள் என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை போலீசாருக்கு ரகசிய போன் ஒன்று வந்துள்ளது.. அதில் பேசிய நபர், "எங்கள் வீட்டுக்கு பக்கத்து தெருவிலுள்ள நபர், அவருடைய செல்போனில் நிறைய சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருக்கிறார்.. அதிலும் தன்னுடைய சொந்த மகளின் ஆபாசவீடியோவை வைத்து விற்று கொண்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார.. இதைக்கேட்டதுமே, அதிர்ந்து போன போலீஸ், "அந்த நபர் யார் என்று மட்டும் காட்டுங்க" என்றார்களாம்.

"நீங்க எங்கே இருந்து பேசறீங்க?" என்று, சென்னை மயிலாப்பூரில் இருந்து பேசுவதாக அந்த நபர் சொல்லி உள்ளார். அதற்கு போலீசார், அந்த நபரை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர்
மயிலாப்பூர்: உடனே சரியென்று சொல்லிய அந்த நபர், போலீசாரை மயிலாப்பூருக்கு வரவழைத்து, தன்னுடைய வீட்டுக்கு பக்கத்து தெருவிலுள்ள, குறிப்பிட்ட வீட்டை அடையாளம் காட்டியிருக்கிறார். பிறகு அந்த வீட்டின் கதவை போலீசார் தட்டியதுமே, தம்பதி இருவருமே கதவை திறந்திருக்கிறார்கள்.. போலீஸ் வந்திருப்பதை கண்டதுமே, இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டிருக்கிறது.
உடனே தம்பதி இருவரும், "நாங்க ஒரு தப்பும்செய்யலியே சார்? இங்கே எதுக்கு வந்தீங்க?" என்று பதறிப்போய் கேட்டிருக்கிறார்கள்.. அவர்களின் பதற்றத்தையும், வேர்க்க விறுவிறுக்க பேசுவதையும் கவனித்த போலீசார், "இங்கே பக்கத்துல ஒரு திருட்டு கேஸுக்காக விசாரிக்க வந்தோம்.. ஒவ்வொருரிடமும் விசாரித்து வருகிறோம். அப்படியே உங்கள் வீட்டுக்கும் வந்தோம்" என்றார்களாம்.
பெட்ரூம்: போலீசார் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த வீட்டின் பெட்ரூமிலிருந்து சிறுமி ஒருவர் வாடிய முகத்துடன் வெளியே வந்தாராம்.. அந்த சிறுமியிடம் போலீசார், "என்னம்மா படிக்கிறே?" என்று கேட்டதற்கு, "10ம் வகுப்பு படிக்கிறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு, அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாராம் சிறுமி.
உடனே போலீசார் சிறுமியின் தந்தையிடம், என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை, உங்க போனை குடுங்க, ஒரு போன் பேசணும் என்று கேட்டுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தந்தை, தன்னுடைய செல்போனை தயங்கியபடியே தந்துள்ளார். ஆனால், அந்த செல்போனுக்கு பாஸ்வேர்டு போட்டிருந்ததால், தவறான பாஸ்வேர்டு நம்பர்களை போட்டு செல்போனையே லாக் செய்ய முயற்சித்தாராம் தந்தை..
மெசேஜ்கள்: பிறகு போலீசார் ஒரு அதட்டு அதட்டியதுமே சரியான பாஸ்வேர்டு எண்ணை போட்டு தந்திருக்கிறார். செல்போனை திறந்ததுமே, "வீடியோ அனுப்புங்க, பணம் அனுப்பிட்டேன், வீடியோ நேரம் எவ்வளவு? கிளாரிட்டி எப்படி?" என்றெல்லாம் மெசெஜ்கள் வந்து குவிந்ததாம்.. இதைக்கவனித்த அந்த தந்தை, "அடுத்தவங்க போனை எப்படி பார்க்கலாம்? எங்க தனிப்பட்ட விஷயத்தில் எப்படி தலையிடலாம்" என்று எகிறினாராம்.
அப்போதுதான் செல்போன் கேலரியில், பெட்ரூமிலிருந்து வெளியே வந்த மகளின் வீடியோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அடுத்த நிமிடமே தாய், தந்தை இருவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு, ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர்.. அங்கு வைத்து அவர்களிடம் விசாரித்தபோது, பல்வேறு பயங்கரங்கள் வெளியே தெரியவந்தன.
விற்பனை: மகள் மட்டுமல்லாமல், மகளின் தோழிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் இந்த தம்பதியினர்... இதில் 6 மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.. மேலும், பல்வேறு சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், அதனை வீடியோ எடுத்து அவைகளை விற்பனையும் செய்துள்ளனர்.. அந்த மாணவிகளுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்ட வீடியோக்கள் அதிகளவில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்..
10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி, தனக்கு படிக்க ஆசையாக இருப்பாகவும், இப்படியொரு காரியத்தை செய்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லி கதறி அழுதாராம்.. அப்போதும் பெற்ற தாய், மகளின் பேச்சை கேட்கவில்லையாம்.
கவுன்சிலிங்: கைது செய்யப்பட்ட நபரின் செல்போனில் உள்ள சிறுமிகளின் வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தம்பதியின் மகளுக்கு போலீசார் கவுன்சலிங்கும் தரப்பட்டு வருகிறதாம்.
இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்கும் என தெரிகிறது.. மகளின் தோழிகள் யார் யார்? வீடியோக்களை எத்தனை பேருக்கு ஷேர் செய்திருக்கிறார்கள்? யார் யார் சிறுமிகளிடம் உறவு வைத்திருந்தார்கள்? வீடியோவை டவுன்லோடு செய்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை போலீசார் கையில் எடுத்துள்ளனர். மயிலாப்பூர் தம்பதிகளின் இந்த செயல்களுக்கு பின்னால், வேறு யாராவது இருக்கிறார்களா? என்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
அதிரடி கைது: தம்பதி தவிர, சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரத்தில் மேலும் பலர் வரிசையாக கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications