சொந்த மகளை விபச்சாரத்தில் தள்ளி.. சிறுமியின் தோழிகளையும் விடாத சென்னை மயிலாப்பூர் பெற்றோர்.. துயரம்
சென்னை: பணத்துக்காக மகளை பாலியல் தொழிலில் தள்ளி, அதனை வீடியோவாகவும் எடுத்து சம்பாதித்துள்ளனர் சென்னை மயிலாப்பூர் தம்பதிகள்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்திவரும் நிலையில், மகளின் தோழிகளையும் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அவைகளையும் வீடியோ எடுத்து விற்பனை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது..
சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தன்னுடைய செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ஆய்வுகள்: இந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது செல்போனையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான், அதில், தன்னுடைய 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளது கண்டறியப்பட்டது. அத்துடன், மேலும், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் செல்போனில் இருந்துள்ளது.
இந்த வீடியோக்களை எல்லாம், சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையும் செய்து வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், கைதான நபருக்கு, அவரது மனைவியே உடந்தையாகவும் இருந்துள்ளார். கோட்டூர்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் இவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெற்றோர்: பெற்றோர் சம்மதத்துடன் நடந்துள்ள இந்த பாலியல் விவகாரம் ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஒருவர், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர். இன்னொருவர், தாம்பரத்திதில் வசித்து வருபவராம்.
ஆபாச வீடியோவில் உள்ள அந்த சிறார்கள் யாரென்று தெரியவில்லை.. எனவே அந்த பிள்ளைகள் யாரென்ற விசாரணயை போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.. அப்போதுதான், இந்த பாலியல் தொழிலில் மேலும் 6 பள்ளி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. சொந்த மகளை மட்டுமின்றி, மகளின் தோழிகளையும் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அவைகளை வீடியோ எடுத்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது..
பள்ளி மாணவிகள்: வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள்..
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், போலீசாரின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications