பியூட்டி பார்லரில் ஸ்கெட்ச்... சென்னையில் பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளி.. "பெரிய" புள்ளி சிக்குதா?
சென்னை: சொந்த மகள் உட்பட பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து விற்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த வீடியோக்களை விற்ற மேலும் 2 பேரை போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைதான சிறுமியின் தாய் குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு மூலம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டிற்கே போலீசார் சென்றுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர்: போலீசாரை பார்த்ததுமே குப்பென சிறுமியின் பெற்றோருக்கு வியர்த்து கொட்டியுள்ளது.. "நாங்க எந்த தப்பும் பண்ணலயே" என்று இருவரும் போலீசாரிடம் பதறி சொன்னார்கள். ஆனால், ஒரு விசாரணைக்கு அந்த பகுதிக்கு வந்திருப்பதாக கூறி பேச்சை கொடுத்துள்ளனர் போலீசார்.
பிறகு, ஒரு போன் பேச வேண்டும் என்று சொல்லி, சிறுமியின் தந்தையின் செல்போனை சைஸாக கேட்டு பெற்றுள்ளனர்.. அப்போதுதான் செல்போன் கேலரியில் உள்ள ஆபாச வீடியோக்களை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.. சொந்த மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து மற்றவர்களுக்கு விற்றதும் தெரிய வந்தது... பெற்ற மகள் உட்பட ஏராளமான சிறுமிகளின் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன..
நூற்றுக்கணக்கான வீடியோ: நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த போலீசார், இதற்கு, அவரது மனைவியும் உடந்தையாக இருந்தது தெரிந்ததுமே, கொந்தளித்துபோய்விட்டார்கள். மகளின் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து விற்ற தம்பதியையும், சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் சிறுமியின் தாய்க்கு பணத்தாசை அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.. தன்னுடைய மகளை பெரிய பெரிய தொழிலதிபர்களிடம், தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைத்தாராம் இந்த தாய்..
படிக்க ஆசை: 10ம் வகுப்பு படிக்கும் அந்த 15 வயது குழந்தை, தன்னுடைய அம்மாவிடம் இதற்கு மறுப்பு சொல்லி பலமுறை அழுதிருக்கிறாராம்.. தான் படிக்க ஆசைப்படுவதாகவும், இந்த காரியத்தை செய்ய துளியும் பிடிக்கவில்லை என்றும் சொல்லி கண்ணீர் விட்டாராம். எனினும் மனம் இரங்காத அந்த தாய், "படித்து சம்பாதிக்கிற பணத்தை, இதிலேயே எடுத்துவிடலாம். சீக்கிரமாக லைஃப்பில் செட்டில் ஆகிவிடலாம்" என்று மகளிடம் சொன்னாராம். ஆனால், அந்த பெரிய பெரிய தொழிலதிபர்கள் யாரென்று தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, "சிறுமியின் அம்மா, சில மாதங்களுக்கு முன்பு, ஸ்பா என்ற அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் இச்சைக்கு மகளை விருந்தாக்கியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல், அதை வீடியோவாக பதிவு செய்து பணத்திற்காகவும் விற்றும் வந்துள்ளார்' என்கிறார்கள்.
துரித விசாரணை: மகளின் தோழிகள் யார் யார்? வீடியோக்களை எத்தனை பேருக்கு ஷேர் செய்திருக்கிறார்கள்? போன்ற விவரங்களை போலீசார் கையில் எடுத்துள்ளனர். மாணவிகளை வன்கொடுமை செய்தவர்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்தவர்களின் பட்டியலை தயார் செய்து, போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மயிலாப்பூர் தம்பதிகளின் இந்த செயல்களுக்கு பின்னால், வேறு யாராவது இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. எனவே, இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்கும் என்றும் தெரிகிறது..
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications