மயிலாப்பூரில் யாரிந்த பெண்? சொந்த மகளை பெற்றோரே இப்படி செய்யலாமா? செல்போனை பார்த்து ஆடிப்போன சென்னை
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று, மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள் என்றாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு, தமிழகத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி-யாக பொறுப்பு வகித்தவர் ரவி. இவர் தன்னுடைய பதவியிலிருந்தபோது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை களைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

அதிரடிகள்: முக்கியமாக, பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தார் ஏடிஜிபி ரவி.
அந்தவகையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது, செல்போனிலேயே அதுபோன்ற ஆபாச வீடியோக்களை யாரும் வைத்திருக்கவும் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், ஆபாச படம் பார்ப்பவர்களை அடுத்தடுத்து கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினார். இந்த கைது நடவடிக்கையால் இன்டர்நெட்களில் ஆபாச படம் பார்ப்பவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய துவங்கியது.
வரவேற்பு: இதில் இன்னொரு சிறப்பு என்வென்றால், யாரெல்லாம் ஆபாச படத்தை டவுன்லோடு செய்தார்களோ, அவர்களே அவைகளை நீக்கியும் விட்டார்கள்.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி காவல்துறை எடுத்த இந்த அதிரடியும், ஏடிஜிபி ரவியின் இந்த செயல்பாடுகளும் அப்போது தமிழக மக்களிடம் வரவேற்பையும் பெற்றதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஒரு அதிர்ச்சி சம்பவம் நம்முடைய தலைநகர் சென்னையில் நடந்துள்ளது.. இந்த செய்தியை கேள்விப்பட்டு மொத்த பெற்றோர்களும் உச்சக்கட்ட கொதிப்பில் உள்ளனர்.
மயிலாப்பூர்: சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தன்னுடைய செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து, அவரது செல்போனையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது, அவரது செல்போனில், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த நபரிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டபோது, ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பெரிய தொகை: அதாவது, இந்த நபர் தன்னுடைய 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதையும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறாராம்.. அத்துடன் இந்த வீடியோக்களை எல்லாம், சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையும் செய்து வந்திருக்கிறார்..
இவரது மகளை தவிர, ஆபாச வீடியோவில் மற்ற சிறுவர்களும் இருக்கிறார்கள்.. ஆனால், அவர்கள் எல்லாம் யார் என்று தெரியவில்லை.. ஆபாச வீடியோவில் ஈடுபடுத்தப்பட்ட அந்த சிறுவர்கள் யார்? சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள் யார்? போன்ற தகவல்களை போலீசார் சேகரிக்க துவங்கியிருக்கிறார்கள்.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், கைதான நபருக்கு, அவரது மனைவியே உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணை: இதையடுத்து, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி இருவரையுமே கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
மேலும் சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள் யார் யார்? அதை ஷேர் செய்தவர்கள் யார் யார்? டவுன்லோடு செய்தவர்கள் யார் யார்? என்ற விவரங்களையும் கண்டறிந்து, மொத்த பேரையும் கைது செய்ய போவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2 பேர் கைது: பெற்றோர் சம்மதத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த பாலியல் பட வியாபாரம், சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சிறார்களின் படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, மேலும் சிலரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சீனிவாசபுரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த மற்றொருவர் என இருவர் கைது செய்யப்பட்டனர். சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், போலீசாரின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications