இனி 10 மணி நேரம் எல்லாம் ஆகாது.. சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. எவ்ளோ நேரத்தில் போகப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இந்த மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கப்படும் புறப்படும் நேரம், கட்டணம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை வந்தே பாரத் ரயில்கள் பெற்று வருகின்றன. முற்றிலும் மாறுபட்ட வெளித்தோற்றம் மட்டும் இன்றி பயணிகளுக்கும் பல வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளன. சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் சாய்வு இருக்கைகள், அகலமான ஜன்னல்கள், முழுவதும் ஏசி, தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என இப்படி பல வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளது.

 Chennai-Nellai Vande Bharat Train;Reach destination within 10 hrs? How much is the fare?

சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பயணிகளுக்கு விமானத்தில் உள்ள வசதிகளுக்கு நிகரான வசதிகள் கொடுக்கப்படுவதால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி -வாரணாசி இடையே இயக்கப்பட்டது. தற்போது வரை நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரை ஒரு ரயிலும் சென்னை - கோயம்புத்தூர் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் பயணிகள் போக்குவரத்து அதிகம் நிறைந்த தென்மாவட்ட வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட பிரதமரிடம் நேரடியாகவே இந்த கோரிக்கையை வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தான் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் முதலில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவை முன்கூட்டியே துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மாத இறுதியிலேயே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாம். 8 பெட்டிகளை கொண்டதாக இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதுமாக விஐபிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளது. பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும் மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தற்போது சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை முன்கூட்டியே துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மாத இறுதியிலேயே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாம். 8 பெட்டிகளை கொண்டதாக இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதுமாக விஐபிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளது. பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும் மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது.

நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்து சேரும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வந்தே பாரத்தில் பயணித்தால் 2 மணி முதல் இரண்டரை மணி நேரம் வரை பயணிகளுக்கு மிச்சம் ஆகும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+