ஓட்டேரி மாமியார்.. பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க.. ஆவேசத்தில் 60 வயது நபர் செய்த பகீர்.. பரபரத்த சென்னை
சென்னை: சென்னையை சேர்ந்த செல்வி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. என்ன நடந்தது?
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வி.. 45 வயதாகிறது.. கணவர் பெயர் ஆறுமுகம். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவருமே பிரிந்துவிட்டனர்.. இதனால் ஆறுமுகம் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றுபோய்விட்டார். இதனால், 3 குழந்தைகளையுமே வளர்க்க வேண்டிய சூழ்நிலை செல்விக்கு வந்துவிட்டதால், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ய துவங்கினார்.
புளியந்தோப்பு: அப்போதுதான் சுப்ரமணி என்ற 60 வயது நபர் பழக்கமானார்.. இவர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.. சுப்ரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஆனாலும், செல்வியுடன் நெருங்கி பழகினார்.. இருவருமே கணவன், மனைவி போல வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் செல்வியின் பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு திருமணத்தையும் செய்து வைத்துள்ளார் செல்வி. 4 மாதத்துக்கு முன்புதான் ஓட்டேரியை சேர்ந்த ஒருவருக்கு தன்னுடைய மகளையும் திருமணம் செய்து தந்தார்.
மருமகள்கள்: பிள்ளைகள் அனைவருக்குமே திருமணம் முடிந்த நிலையில், சுப்ரமணியுடனான உறவை மெல்ல மெல்ல குறைத்து கொள்ள துவங்கினார் செல்வி... பிறகு, மாப்பிள்ளை, மருமகள்கள் என வீட்டுக்கு வந்துவிட்டதால், இனிமேல் வீட்டிற்கு வரவேண்டாம் என்றும் சொல்லி உள்ளார்.. இறுதியில், சுப்ரமணியுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் செல்வி.
ஆனால் இதனையெல்லாம் சுப்பிரமணி ஏற்கவில்லை.. செல்வி தன்னுடன் பேசாமல் போவதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.. .
இப்படிப்பட்ட சூழலில்தான், ஓட்டேரியில் திருமணம் செய்து அனுப்பிய தன்னுடைய மகளை பார்க்க செல்வி சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுப்பிரமணி, செல்வியை பார்ப்பதற்காக, செல்வியின் மகள் வீட்டிற்கே வந்துவிட்டார்.
பெட்ரோல்: இதுவரை இருந்ததைபோலவே, நாம் இருவரும் கணவன், மனைவிபோல மறுபடியும் சேர்ந்து வாழலாம் என்று சுப்பிரமணி செல்வியிடம் சொல்லியுள்ளார்.. இதற்கு செல்வியோ, "பிள்ளைகள் எல்லாம் பெரியவர்களாகி விட்டார்கள்.. கல்யாணமுமாகிவிட்டது.. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்" என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி நெருப்பு வைத்துவிட்டார்.
இதனால் உடம்பெல்லாம் தீ பரவியநிலையில், செல்வி அலறி துடித்தார்.. செல்வி மீது பெட்ரோல் ஊற்றும்போது, அது சுப்ரமணியம் மீதும் பட்டுவிட்டது.. இதனால் அவர் மீதும் தீ பற்றியது. 2 பேருமே தீயில் எரிந்திருக்கிறார்கள்..
மருமகன்: இவர்களின் அலறல் சத்தம் கேட்டு செல்வியின் மருமகன் ஓடிவந்துள்ளார். செல்வியை தீயிலிலிருந்து அணைக்க முயன்றார்.. ஆனால் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.. இறுதியில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, 3 பேரையுமே மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பிரமணி, செல்வியின் மருமகன் 2 பேருக்குமே 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.. இப்போது சிகிச்சையும் பெற்று வருகிறார்கள்.. ஆனால், செல்விக்கு சீரியஸாக இருக்கிறதாம். 90 சதவீதம் தீக்காயங்கள் இருப்பதால், உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்..!!!
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications