Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெரும்பாக்கம் 20 அடுக்குமாடி குடியிருப்புக்கு வெள்ளத்தால் வித்தியாசமான புதிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரும்பாக்கம் 20 அடுக்குமாடி குடியிருப்புக்கு வெள்ளத்தால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவினை பார்க்கும் முன்பு பெரும்பாக்கம் எப்படியான இடம் என்பதை பார்ப்போம்.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதிதான் பெரும்பாக்கம். பல்லாவரம் ஏரி, வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி என தென்சென்னையின் மொத்த தண்ணீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களுக்கு தான் வரும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது கடல் மட்டத்திற்கு சமமாகவும் சில இடங்களில் அதைவிட குறைவாகவும் உள்ள பகுதியாகும். சுமார் 15 அடி வரை தண்ணீரை அப்படியே தேக்கும். அதாவது வேளச்சேரி பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலத்திற்கு போகும் தண்ணீர் நேரடியாக கடலில் கலக்காது. அந்த தண்ணீர் சதுப்பு நிலத்தில்தான் தேங்கும்.

Chennai Perumbakkam 20 flats appartment faces new problem due to pallikaranai marshland flood

ஒக்கியம் மகுடு என அழைக்கப்படும் பகுதி, சென்னை ஓஎம்ஆர் சாலையில் காரப்பாக்கத்திற்கும், ஒக்கியம் ஒக்கியம் பேட்டைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் அடைக்காமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இது கொஞ்சம் மேடான பகுதி, இதற்கு தண்ணீர் வர வேண்டும் என்றால் பள்ளிக்கரணை ஏரியில் தண்ணீர் 15 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி அதற்குமேல் வரும் தண்ணீரே கடலுக்கு போகும்.

இந்த தண்ணீர் 15 வரை தேங்கும் என்பதால் பள்ளிக்கரணை சதுப்புநிலம் முழுவதும் தண்ணீரை உள்வாங்கிய பிறகே தண்ணீர் 15 அடிக்கு நிரம்பி அதன்பிறகு மேட்டை கடந்து பக்கிம்காம் கால்வாய்க்கு போகும். யோசித்து பாருங்கள் பள்ளமான இடத்தில் இருந்து மேடான நிலப்பரப்புக்கு தண்ணீர் போக வேண்டும் என்றால் பள்ளம் முழுமையாக நிரம்ப வேண்டும்.

Chennai Perumbakkam 20 flats appartment faces new problem due to pallikaranai marshland flood

அந்த வகையில் கடல் மட்டத்தை விட பள்ளமான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (ஸ்பான்ச் மாதிரி தண்ணீரை உறிஞ்சி) எந்த தடங்கலும் இல்லாமல் முழுமையாக நிரம்பினால் மட்டுமே, மீதமுள்ள தண்ணீர் ஒக்கியம் மகுடு வழியாக பக்கிம்ஹாம் கால்வாயில் கலந்து தண்ணீரில் கடலில் கலக்க முடியும். இப்படியான சூழலில் சதுப்பு நிலங்களில் வீடுகளில் தண்ணீர் உடனே வடிய வழியே இல்லை. இதுதான் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பெரும்பாக்கத்தில் உள்ள பெரிய சிக்கல். அதனால் தான் சதுப்பு நிலப்பகுதியான பெரும்பாக்கத்தில் பெரிய பெரிய வீடுகளில் மழைநீர் அப்படியே வடியாமல் தேங்குகிறது.

இப்போது பத்திரிக்கையாளர் ட்விட்டரில் வெளியட்ட பதிவிற்கு வருவோம். சென்னை பெரும்பாக்கம் 20 அடுக்குமாடி குடியிருப்புக்கு வெள்ளத்தால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 25 ஏக்கர், 1500 வீடுகள் , 20 மாடிகள், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் என பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காணப்படும் இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருப்பது பெரும்பாக்கத்தில்.

கடந்த 4ம் தேதி பெய்த கன மழையில் பெரும்பாக்கம் ஏரி முழுவதுமாக நிரம்பி அதிலிருந்து வெளியேறிய மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. நேற்று வரை ஒரு அடி அளவிற்கு தரைத்தளத்தில் மழை நீர் இருந்த நிலையில் இன்று அவை அகற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுரங்க தளத்தில் கார் பார்க்கிங் அமைந்துள்ளது.நான்காம் தேதி காலை வரை ஒரு சொட்டு நீர் கூட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தேங்காத நிலையில், ஏரியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டதால்

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சுரங்கத் தளத்தில் ஓட்டை ஏற்பட்டு, ஏரி நீர் முழுவதுமாக உட்புகுந்துள்ளது. தரைத்தளத்தில் மழை நீர் வடிந்தாலும் சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது மிகவும் சவால் நிறைந்த பணியாக உள்ளது. குறிப்பாக தரைத்தளம் குடியிருப்பு அமைந்துள்ள முழு பகுதியிலும் இருப்பதால் சுமார் 30 கோடி லிட்டர் மழை நீர் உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது. 15 அடி அளவிற்கு கீழே மழைநீர் சூழ்ந்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட கார்களும், 40 இருசக்கர வாகனங்களும் சிக்கியுள்ளது. மேலும் 10 நாட்கள் மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தேங்கி இருக்கும் பட்சத்தில் 20 மாடி கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது வரை எட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீரை முழுமையாக வெளியேற்ற 25 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த பதிவில் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய மக்கள், வீடுகள், இடங்கள் வாங்கிய மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். இனி வரும் காலங்களில் புயல் மழை வந்தால் என்ன செய்வது என்று கவலையில் உள்ள மக்களுக்கு மாற்றுத்தீர்வுகளை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+