பெருங்களத்தூரில் செருப்பை கழட்டிட்டு 12வது மாடிக்கு அவசரமாக ஓடிய பெண்? இதுக்கா? தடதட சென்னை தாம்பரம்
சென்னை: கல்யாணம் ஆகி 3 மாதம்தான் மகிழ்ச்சியாக இருந்தனர் புதுமண தம்பதிகள்.. அதற்குள் தகராறு வெடித்துவிட்டது.. இதனால் கணவன், மனைவி பிரிந்து வாழ துவங்கினார்கள்.. தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தாலும், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.. இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரி.. இவருக்கு 30 வயதாகிறது.. MBBS, MS படித்திருக்கிறார்.. சென்னை மீனம்பாக்கத்தில் மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. இதற்காக சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்தார்..

சாப்ட்வேர் கம்பெனி
கடந்த நவம்பர் மாதம், இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த யோதீஸ்வரன் என்ற 34 வயது நபருக்கும் திருமணம் நடந்தது. என்ஜினீயரான யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் முடிந்ததும் தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை துவங்கினார்கள்.. ஆனால், அந்த மகிழ்ச்சி வெறும் 3 மாதங்கள் மட்டுமே நீடித்தது.. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில் யோதீஸ்வரன், மனைவியை பிரிந்து சொந்த ஊருக்கே கிளம்பி சென்றுவிட்டார்.. அங்கு வீட்டிலிருந்தே பணிபுரிந்தும் வந்தார். எனினும், அடிக்கடி சென்னைக்கு வந்து மனைவியை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
பெருங்களத்தூர் பெண் டாக்டர்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் ஜோதீஸ்வரிக்கு விடுமுறை கிடைத்துள்ளது.. அன்றைய தினம், பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தன்னுடைய சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு ஜோதீஸ்வரி சென்றிருக்கிறார்..
நாள் முழுவதும் சகோதரியிடம் பேசி கொண்டிருந்த ஜோதீஸ்வரி, மாலையில் தன்னுடைய வீட்டுக்கு கிளம்புவதாக சொல்லி, ஹேண்ட்பேக் மாட்டிக் கொண்டு, செருப்பையும் அணிந்து கொண்டு வெளியே வந்தார்.. ஆனால், ஜோதீஸ்வரி கீழே இறங்கி செல்லாமல், அந்த அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடிக்கு ஓடினார்..
ஹேண்ட்பேக், செருப்பு
அங்கே தன்னுடைய செருப்பு, ஹேண்ட்பேக்கை கழற்றி வைத்துவிட்டு 12வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜோதீஸ்வரி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார் தற்கொலை செய்த ஜோதீஸ்வரி உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அத்துடன், ஜோதீஸ்வரி தங்கியிருந்த அறையையும் சோதனையிட்டபோது, தற்கொலை செய்வதற்கு முன்பாக ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
தாம்பரத்தில் ஜோதீஸ்வரி
இதுகுறித்து போலீசார் சொன்னபோது, "யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உள்பட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் டேட்டிங் செயலி மூலமாக 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து அவர்களுடன் பழகி வந்துள்ளார்.
ஜோதீஸ்வரி, கணவரின் லேப்டாப்பை பரிசோதனை செய்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிய வந்து மனம் உடைந்தார். இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் தாயுடன் அறை எடுத்து தங்கி இருந்த ஜோதீஸ்வரி, அக்கா வீட்டுக்கு சென்றபோதுதான் இந்த சோக முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்" என்று தெரிவித்திருந்தனர்.
12 வது மாடிக்கு ஓடிய பெண் டாக்டர்
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை போலீசார் துவக்கினார்கள்... மேலும், ஜோதீஸ்வரிக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விசாரணையும் ஆரம்பமானது.
இந்நிலையில், ஜோதீஸ்வரி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது ஜோதீஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியது யோதீஸ்வரன்தான் என்பது உறுதியாகியிருக்கிறது.. இதையடுத்து, போலீசார் யோதீஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications