பெருங்களத்தூர் டூ முடிச்சூர் கவனிச்சீங்களா? தாம்பரத்துக்கு போன "நம்பர்".. விறுவிறு சென்னை மாநகராட்சி
சென்னை: பருவமழை துவங்கி உள்ள நிலையில், சென்னையின் பிரதான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்கிறது..
இதுபோன்ற மழைக்காலங்களில், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சிட்லபாக்கம், சமத்துவ பெரியார் நகர் போன்ற பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது வழக்கம். அதனால்தான், இந்த முறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

முடிச்சூர் ரோடு: எனினும், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக குண்டும், குழியுமாக மாறியிருக்கும் தாம்பரம் - முடிச்சூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையானது, தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே, மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. எனினும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பெருத்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
மெட்ரோ பணிகள்: அதுமட்டுமல்லாமல், சென்னையின் பல இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில், சேதம் அடைந்த சாலைகள் தற்போது போடப்பட்டிருக்கின்றன.. இதைத்தவிர, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகவும் சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.. மழைநீர் வடிகால் பணி மட்டுமின்றி மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டிருக்கின்றன..
இவைகளில் முழுமையாக பணி முடிந்த இடங்களில் மட்டுமே, சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது பருவமழை துவங்கி உள்ளது.
தாம்பரம் ரோடு: தாம்பரம்- வேளச்சேரி மெயின் ரோட்டில் நாராயணபுரம்- வேளச்சேரி இடையே 1.5 கி.மீ. தூரம் சாலைகள் சேதமாகி உள்ளன.. இங்கு 2 இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டும் உள்ளன.. பெருங்குடியை எடுத்துக்காண்டால், கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சீராகவே இல்லை. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இணைப்பு சாலைகளும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. அசோக்நகர் சாலை வரை இந்த பிரச்சனை நீடிக்கிறது.
இப்படி சென்னையின் பிரதான சாலைகள் சீராக இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி விடுகிறார்கள்.. சில சமயம், விபத்துக்களும் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால்தான், விரைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்க வலுத்துள்ளது.

தாம்பரம் கமிஷனர்: இந்நிலையில், சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளும் தீவிரமடைந்துள்ளன.. மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செல்போன் நம்பர்: பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அரையை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800425435, 1800251600, வாட்ஸ்அப் எண் 8438353355 மற்றும் துணை ஆணையர் 9677257153, உதவி ஆணையாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகு மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications