சென்னை வாடகை வீட்டு குளியலறையில் இருந்த பேனா.. சந்தேகத்துடன் பார்த்த பெண்.. வசமாக சிக்கிய டாக்டர்
சென்னை: சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen உளவு கருவி மூலம் குளியறையில் படம் எடுத்து வந்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இன்றைய தொழில் நுட்பங்கள் பலருக்கு நல்ல விஷயங்களை தந்தாலும்,அதனை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவோர் அதிகமாகவே உள்ளனர். அடுத்தவர்கள் அந்தரகங்களை பரப்பவும், பார்க்கவுமே தொழில் நுட்பங்களை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர்.. முன்பெல்லாம் ஆபாசமான புத்தகங்களை பார்க்க போனாலே அவர்களை கெட்டவர்களாவும், மோசமானவர்களாகவும் பார்த்தது.. ஆனால் இன்றைக்கு சர்வ சாதாரணமாக மொபைல்களில், கணிணிகளில் டவுன்லோடு செய்தும், ஆன்லைனிலும் இன்றைய இளம் சமுதாயத்தினர் பார்க்கிறார்கள்.

இதுஒருபுறம் எனில், தங்கள் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், தங்கள் தோழிகள், தங்கள் உறவினர்களை ஆடையில்லாமல் பார்க்க விரும்பும் வக்கிர குணம் பலருக்கு இருக்கிறது. அவர்களில் பலர் சத்தமில்லாமல் இருக்கிறார்கள். உண்மை வெளிப்படும் போது தான் அவர்கள் யார் என்பது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிய வருகிறது. கூகுள் ஹிஸ்டரியை அழிக்காமல் வெளியே எடுத்தால் பலர் எவ்வளவு மோசமான வக்கிமான ஆட்கள் என்பது வெளியில் தெரியும் அந்த அளவிற்கு பலர் ஆபாசங்களை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.
சென்னையில் திரைப்பட பாணியில் ஒரு பெரிய சம்பவமே நடந்திருக்கிறது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரச்சன்னா நடிப்பில் வெளியான திருட்டுப்பயலே திரைப்படத்தில் கழிவறையில் ஸ்பை கேமராவை பிரச்சனா வைப்பார். அதன் மூலம் வீடியோக்களை எடுத்து ரசிப்பதாக படத்தில் காட்சிகள் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்ணை Spy pen உளவு கருவி மூலம் ஆபாசமாகப் படம் எடுத்து வந்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் (MDS) 36 வயதாகும் இப்ராஹிம் (36) கைது செய்யப்பட்டுள்ளார்..
முன்னதாக அப்பெண் சந்தேகம் அடைந்து, குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவு பார்க்கும் கருவி என்பதை அறிந்து திடுக்கிட்டார். இது பற்றி அந்த பெண் அளித்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தி முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications