Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதல்.. ஆபாச படம் எடுத்து வைத்து சென்னை தொழிலதிபரின் மனைவியை மிரட்டிய வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என சென்னையில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (35), தொழிலதிபர். இவரது மனைவி மீனா (32). ( இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். மீனா தனது கணவருடன் சேர்ந்து கார் இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது அலுவலகத்தில் ஊழியராக ரத்தினகுமார் (28), என்ற இளைஞர் பணிபுரிந்தார். மீனாவும் ரத்தினகுமாரும் நெருங்கி பழகியுள்ளார்.

முன்னாள் காதலன்

முன்னாள் காதலன்

அப்போது, மீனா தனது குடும்ப விவகாரங்கள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட ரத்தினக்குமார் ஆறுதல் கூறுவது போல் பேசியுள்ளார். இதை நம்பி அனைத்தையும் உளறிய மீனா ஒரு கட்டத்தில், முன்னாள் காதலனுடன் திருமணத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்ததையும் ரத்தினகுமாரிடம் தெரிவித்திருக்கிறார்.

அடிக்கடி உல்லாசம்

அடிக்கடி உல்லாசம்

இதனிடையே இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. அதை செல்போனில் ரத்னகுமார் படம் பிடித்துள்ளார்.. இதை கூறி மீனாவிடம் அடிக்கடி பணம் கேட்டு ரத்தினகுமார் தொல்லை செய்திருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த மீனா

அதிர்ச்சி அடைந்த மீனா

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, கணவருக்கு தெரியாமல் முடிந்த வரை பணம் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று மீனா மறுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ரத்தினகுமார், ‘‘நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால், உனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்,'' என்று மிரட்டியிருக்கிறார்.

போனில் ஆபாச படங்கள்

போனில் ஆபாச படங்கள்

இதனால், செய்வதறியாது மீனா தவித்து வந்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் ராஜா அவரது செல்போனை எடுத்து, ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்'' மூலம் சோதனை செய்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்களும், வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மீனாவிடம் கேட்டபோது, ரத்தினகுமார் தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உண்மையை கூறியிருக்கிறார்.

கைது செய்த போலீஸ்

கைது செய்த போலீஸ்

அத்துடன் கள்ளக்காதலையும் ஒப்புக்கொண்டார். அத்துடன் ஆபாசமாக படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டுவதையும் கணவனிடம் மீனா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினகுமாரை கைது செய்து செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+