சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்.. தேர்தல் பணிகளில் ஈடுபடவும் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளில் அருண் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் சென்னையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். அருண் பாரபட்சமாக செயல்படுவதாக தவெக மற்றும் பாஜக குற்றம் சாட்டியிருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தும் புகார் அளித்த நிலையில், காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. சட்டசபை தேர்தலையொட்டி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து புதிய தலைமை செயலாளராக சாய் குமாரை நியமித்தது தேர்தல் ஆணையம். இதேபோன்று பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த வெங்கடராமன் மாற்றப்பட்டு புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுள்ளார்.
இதேபோல் மதுரை போலீஸ் கமிஷனர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி என மொத்தம் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பணி மாறுதல் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் சென்னை மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் ஐபிஎஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக தற்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், கூடுதல் காவல்துறை இயக்குநருமான அபின் தினேஷ் மோதக் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பணிகளில் அருண் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாஜகவினர் மற்றும் தவெகவினரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களை மாற்றக் கோரியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் அடுத்தடுத்து அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications