சென்னையில் கார், டூவிலர் வச்சிருக்கீங்களா.. போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் கொடுத்த முக்கிய அப்டேட்

சென்னையில் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது என மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு வகையில் அப்டேட் ஆகி வருகிறார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்க ரோந்து பணியில் தொடங்கி, வாகன தணிக்கை வரை பல்வேறு விஷயங்களில் கடந்த சில மாதங்களில் அப்டேட் ஆகி உள்ளனர்.

சென்னையில் கிட்டத்தட்ட எல்லா சிக்னல்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதேபோல் சில சிக்னல்களில் அதிநவீன வசதிகளுடன் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. சென்னையில் உள்ள கண்ட்ரோல் ரூம்களில் இருந்தே, குற்றவாளிகள் எங்கு சுற்றினாலும் போலீசாரால் கண்டுபிடித்துவிட முடியும்.

அபராதம்

அபராதம்

அதேபோல் வாகன தணிக்கையில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆனால், அடுத்தடுத்த சிக்னல்களில் உள்ள கேமராக்கள் காரணமாக ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிலையே உள்ளது. சிக்னலை மதிக்காமல் சென்றால் அவர்களுக்கு வீடு தேடி அபராதம் வருகிறது. அதேபோல் ஒன்வேயில் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அப்டேட்

அப்டேட்

சென்னை போக்குவரத்து போலீசார் ரேஸ் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடுவதை கண்காணிக்க சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களையும் கண்டறிந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதேபோல் அபராதம் விதிப்பதில் இசலான் தொடங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனி ஆப் வரை பல்வேறு விஷயங்களை அப்டேட் செய்துள்ளனர் சென்னை போலீசார்.

திருட்டு வாகனங்கள்

திருட்டு வாகனங்கள்

இந்நிலையில் சென்னையில் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதன்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பில் இதற்கான விழா நடந்தது. இந்த விழாவில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சிசரத்கர், இணை கமிஷனர் மயில்வாகனன் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் பேசிய, சென்னை போக்குவரத்து கமிஷ்னர் சங்கர் ஜிவால், "போலீசுக்கு பல்வேறு நவீன வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும். சென்னை காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம். அதில் ஒரு திட்டம்தான் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் ஆகும்.

ரிமோட் சிக்னல்

ரிமோட் சிக்னல்

அவசர வேளைகளில் சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது, சிக்னலை மாற்றி வழி விடவேண்டும். போக்குவரத்து போலீசார் அருகில் இல்லாதபோது, சிக்னலை மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இதுபோன்ற நேரத்தில் ரிமோட் மூலம் சிக்னலை உடனே மாற்றி விடலாம். அதனால் இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கமிஷ்னர் பேட்டி

கமிஷ்னர் பேட்டி

இது தவிர கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்கள் அதிவேகமாக சென்றால், அவற்றின் வேகத்தை கணக்கிட்டு அபராத தொகை தொகை விதிக்கும் 6 கருவிகளின் திரைகளும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் டிரோன் மூலமாக போக்குவரத்து நெரிசலை கண்காணித்து, சரி செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கும் நவீன வசதியும் வரப்போகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், இனி போக்குவரத்து போலீசாருக்கு இலவசமாக குளிர்ச்சியான மோர் தினமும் வழங்கப்படும்" இவ்வாறு சென்னை மாநகர கமிஷ்னர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+