ஸ்டாலினை தொடர்ந்து பிபிஇ கிட்டுடன் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்..காவலர்களிடம் நலம் விசாரிப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பிபிஇ கிட் அணிந்து கொண்டு காவலர் மருத்துவமனையில் கொரோனா பாதித்த காவலர்களை சந்தித்த காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல் முன்களப் பணியாளர்களும் அவதியடைந்து வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார், நிருபர்கள் என பலர் கொரோனாவால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை தருவது போல் முதல்வர் ஸ்டாலின் ஒரு காரியத்தை செய்தார்.

கோவை
அதாவது கொரோனா அதிகம் பாதித்த கோவையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளை சந்திக்க பிபிஇ கிட் அணிந்து கொண்டு சென்றார். அங்கு நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின.

உயிர்
மருத்துவர்கள் எத்தனையோ அறிவுறுத்தியும் தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை தான் சந்திக்க சென்றது, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே என ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றியது.

காவல் துறை
அவ்வாறு ஏற்பட்ட மாறுதலில் சென்னை காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றவர் சங்கர் ஜிவால். நேற்றைய தினம் இவர் தலைமையிலான போலீஸார் பிரபல ரவுடி சிடி மணியை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனைக்கு சென்றார்.

பாதுகாப்பு உபகரணங்கள்
அங்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு கொரோனா பாதித்த காவலர்களிடம் நலம் விசாரித்தார். கொரோனா வந்தால் மனஉளைச்சலில் இருக்கும் நோயாளிகளுக்கு ஊக்கமளிக்க நேரடியாக ஸ்டாலின் சந்தித்தது போல் காவல் துறை கமிஷனரும் செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications