ஹெல்மெட் போடாதவங்களுக்கு வேற லெவலில் பைன் போடும் போலீஸ்.. நீங்களே பாருங்க
சென்னை: மக்களே கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க, உங்க உயிரையும் பணத்தையும் காப்பாத்திக்கோங்க என்று கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வாகன சோதனையின் போது தலைகவசம் அணியாமல் தப்பிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கப்படுவது போன்று இருக்கிறது. அந்த வீடியா சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தாம்பரம், திருநெல்வேலி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக சென்று வந்த பொதுமக்கள் இப்போது அப்படி பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவதை தவிர்த்து இருந்தவர்கள் கடந்த சில வருடங்களாக ஹெல்மெட் அணியாமல் சாலையில் போக முடியாது என்ற நிலையை ஏற்றுக்கொண்டுள்ளனர் . அதேநேரம் சிலர் போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள் ஆனால் சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் அப்படி சென்றால் சிக்கல் தான் வருகிறது.

பொதுவாக செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ, அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருக்கும் நிலையில், சுற்றும் யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்றாலோ நிச்சயம் இப்போது அபராதம் விதிக்கிறார்கள் . சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் தானியாங்கி கேமரா பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் கண்டிப்பாக போலீசிடம் சிக்குவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் கடந்த இரண்ட வருடங்களாக எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
இவை தினசரி நடப்பது தான் என்றாலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வளைத்து வளைத்து பிடிப்பார்கள். இரவு நேரங்களில் மது அருந்துவிட்டு போலீசிடம் மாட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் கட்டாயம் கட்ட வேண்டியதிருக்கும். வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
இதில் ஹைலைட்டான விஷயம் சென்னைக்கு மட்டும் இருக்கிறது. அது ஆன்லைன் அபராதம் முறை தான். பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்யலாம். அப்படி செய்தால் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வேற level ல fine போடறீங்க சார் @tnpoliceoffl
— Razor (@razorturbokat) July 29, 2024
மக்களே கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க, உங்க உயிரையும் பணத்தையும் காப்பாத்திக்கோங்க 🙏 pic.twitter.com/9QZ74zzlgU
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை உறுதி. நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகன சோதனையின் போது தலைகவசம் அணியாமல் தப்பிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்களே கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க, உங்க உயிரையும் பணத்தையும் காப்பாத்திக்கோங்க என்று கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோவை டேக் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications