SIR படிவத்தை வைத்து.. 21 ஆண்டு தலைமறைவு குற்றவாளியை தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!
சென்னை: கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணூரில் நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளியாக தேடப்பட்டு வந்த நபர், தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். SIR விண்ணப்பத்தை வைத்து போலீசார் நைசாக குற்றவாளியை கைது செய்திருக்கின்றனர்.
இது குறித்து எண்ணூர் போலீசார் விளக்கமளித்ததாவது, "கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் எண்ணூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவாகிறது. மரியம் பீவி என்கிற பெண், தான் வாடகைக்கு விட்டிருந்த வீட்டில் சடலம் ஒன்று கிடப்பதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் ராஜேந்திரன் என்றும், அவருடைய தகப்பனார் பெயர் பரமசிவன் என்றும், ஊர் கடலூர் மாவட்டம் என்றும் தெரியவந்தது. இந்த தகவல்களைத் தவிர வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. குற்றம் நடந்த காலம் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காலகட்டம் என்பதால், குற்றவாளியின் முகத்தை கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அடிப்படை தகவல்களை கொண்டு குற்றவாளியை தேடிய போது குற்றவாளி தப்பி விட்டார் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆவடி மாநகர காவல் ஆணையர், நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்து சிறப்பு குழுவை உருவாக்கி இருந்தார்.
அதன் அடிப்படையில் ராஜேந்திரனை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலை நாங்கள் சரிபார்க்க தொடங்கினோம். மகன் பெயர் ராஜேந்திரன் என்றும், தந்தை பெயர் பரமசிவன் என்றும் இருக்கக்கூடிய நபர்களை நாங்கள் ஒரு பட்டியலாக எடுத்தோம். ஏறத்தாழ 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை ஒவ்வொருவராக நேரில் சென்று அடையாளம் கண்டபோது அவர்களின் 7 பேர் வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருந்தனர்.
ஒருவர் மட்டும் மீது மட்டும் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அந்த ஒருவர், மதம் மாறி இருப்பதும் தெரியவந்தது. எனவே அவர் தொடர்பான விசாரணையை நாங்கள் தீவிர படுத்தினோம். தமிழ்நாடு முழுவதும் தற்போது எஸ்ஐஆர் படிவம் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், எங்களுடைய சிறப்பு குழுவினர் படிவங்களை வழங்குவதை போல அவருடைய வீட்டில் இருந்து 4 வீடுகளுக்கு முன்பு இருந்தே விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் அவரது குடும்பத்தினர் ராஜேந்திரன் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்தனர். குறிப்பாக அவர் மதம் மாறி இருப்பதாகவும் வீட்டிற்கு அடிக்கடி வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
அவரிடம் செல்போன் கிடையாது, எனவே அவரை கண்டுபிடிப்பது சிக்கல் இருந்தது. அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தங்கி இருப்பார் என்றும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்கி விடுவார் என்றும் தகவல்கள் தெரிய வந்தன. இதையடுத்து ஒரு வார கால தேடுதலுக்கு பின்னர் பெங்களூரில் வைத்து ராஜேந்திரனை நாங்கள் கைது செய்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications